மதுபான ப்ரியர்களுக்கு ஹெப்பி நியூஸ்... டாஸ்மாக்கில் ரூ5, 10 தொல்லை, இனி இல்லை..!

By Thiraviaraj RMFirst Published Jan 21, 2021, 2:49 PM IST
Highlights

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபானங்கள் விற்பனை குறித்து உரிய விதிமுறை, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றபடவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது. விதிமீறியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா தொடா்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரசு மதுக்கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியரை வைக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுக்கடைகளில் விலைப்பட்டியலை வைக்க தவறினால் பிரதிநிதிகள் உட்பட அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமா்வு உத்தரவிட்டுள்ளது.

click me!