பெண்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் ஆளி விதைகள்!! 

By Kalai Selvi  |  First Published Aug 29, 2024, 3:58 PM IST

Flax Seeds Benefits For Woman : உடலை ஆரோக்கியமாக பேணி பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆளி விதைகள் வரப்பிரசாதம்.  பெண்களுக்கு ஆளி விதைகள் நன்மைகளை வாரி இறைக்கின்றன. 


ப்ளக்ஸ்சீட்ஸ் (Flaxseeds) என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஆளி விதைகள் பல்வேறு சத்துக்களை உடையது. இதில் நார்ச்சத்து, புரதம்,  கார்போஹைட்ரேட் போன்றவை காணப்படுகின்றன. அது மட்டுமின்றி தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் ஆகிய தாதுச்சத்துகளும் நிரம்பி வழிகின்றன. இது பெண்களுக்கு பல வழிகளில் உதவுகிறது. அதை இங்கு விரிவாக காணலாம். 

பெண்களுக்கு ஆளி விதைகள் நன்மைகள் : 

Latest Videos

undefined

1. மாதவிடாய் பிரச்சனை தீரும்

சிலருக்கு மாதவிடாய் வருவதில் பிரச்சனைகள் உண்டு. தாமதமான மாதவிடாய் பல பிரச்சனைகளை கொண்டுவரும். சில பெண்களுக்கு முறையாக மாதவிடாய் ஏற்படாது. இந்த பிரச்சனையை சரி செய்ய ஆளி விதை உதவும்.  அண்டவிடுப்பு, மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு இடையில் உள்ள நாட்களை சீராக வைக்கும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும். ஹார்மோன்களையும் பராமரிக்கும். 

2. தலை முடி வளர்ச்சி

ஒருவருடைய தோற்றத்தை நன்றாக பராமரிப்பது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தோற்றத்தை மிடுக்காக காட்ட முடி, சருமம் நன்றாக இருப்பதும் அவசியம். இந்த விதைகளில் காணப்படும் வைட்டமின் 'ஈ' முடி வளர்ச்சிக்கு உதவும். ஆளி விதைகளில் தயார் செய்யப்பட்ட ஆளி எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலைமுடி வலுவாகும். ஆளி விதைகளில் உள்ள வழவழப்பான ஜெல் முடியை பளபளப்பாக வைத்திருக்கும். குளிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு, அதன் ஜெல்லை தலைமுடியில் தடவி 
ஊறவிட்டு குளிக்கலாம். 

இதையும் படிங்க:   Flax Seed Benefits: தினமும் 1 டீஸ்பூன் ஆளி விதை சாப்பிடுங்கள்!! எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்!!

3. சரும பராமரிப்பு 

பெண்களுக்கு ஆளி விதைகள் சரும பராமரிப்பு வெகுவாக பயன்படுகிறது. இந்த விதைகளில் உள்ள வழவழப்பான ஜெல் தலைமுடி, சரும் இரண்டுக்கும் நன்மை பயக்கும். கழுவவும். இது முடி மற்றும் முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது. முகத்திற்கு ஆளி ஜெல்லை பூசி சிறிது நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் புத்துணர்வாக இருக்கும்.  

4. மலச்சிக்கல் நிவாரணம்

ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக இருக்கும். நன்கு வறுத்த ஆளி விதைகளை தூள் செய்து கொள்ளுங்கள். அதனை இரவில் தண்ணீரில் ஊறவிடுங்கள். இந்த காலையில் குடித்தால் மலச்சிக்கல் குணமாகும். அஜீரண கோளாறை தடுக்க உதவும். 

இதையும் படிங்க:  Flax seed Milk: பாலில் ஆளி விதைகளை கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

5. எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தங்களுடைய உணவில் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்வது உதவிகரமாக இருக்கும். ஆளி விதையில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை வெகுவாக குறைக்கும். இந்த விதையில் உள்ள ஒமேகா கொழுப்பு உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். 

6. இதய நோய் தீரும் 

இதய நோய் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது.  ஆரோக்கியமான உணவுகளை உண்பதால் இதய நோய் வரும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கலாம். ஆளி விதைகளை உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இந்த விதைகளை தண்ணீரில் ஊறவிட்டு  காலையில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். 

முக்கிய குறிப்பு : ஒரே நாளில் இதன் பலன்களை பெற்று விட முடியாது. தொடர்ந்து உண்பதால் இதனுடைய பலன்களை முழுமையாக பெறலாம். ஏற்கனவே உடல்நல குறைபாடுகளுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!