காவு வாங்கும் கொரோனா... நடிகர் சத்யராஜ் மகள் போட்ட 10 பட்டியல்..!

Published : Feb 04, 2020, 04:41 PM IST
காவு வாங்கும் கொரோனா... நடிகர் சத்யராஜ் மகள் போட்ட 10 பட்டியல்..!

சுருக்கம்

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.  

இந்தியாவில் புனேவிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில்தான் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இல்லை. கேரள- தமிழக எல்லையில் முழுமையான கண்காணிப்பு பணியில் அரசு உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் விளக்கம் அளித்தாலும் கொரோனா பீதி இன்னும் அகலவில்லை. 

இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையாள வேண்டிய வழிமுறைகளைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள். சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள். நன்கு சமைத்த உணவுகளையே உண்ணுங்கள். ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விடவும்.

இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும். அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும். நோய்வாய்ப்பட்ட விலங்குகளிடமிருந்தும், கெட்டுப்போன மாமிசங்களிடமிருந்தும் விலகியிருக்கவும். குறிப்பாக விலங்குகளையும், விலங்குகளின் பொருட்களையும் தொட்ட பிறகு அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள்.

இருமலோ, காய்ச்சலோ இருந்தால் பயணத்தைத் தவிர்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி உணவுகளை அதிகம் உண்ணுங்கள்’’ என அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்