12 ராசியினரில் யாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Feb 4, 2020, 1:50 PM IST
Highlights

செலவுகளை குறைக்க முடியாமல் சற்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சில உதவிகளைச் செய்வீர்கள். உணவு விஷயத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடாக இருப்பது மிகவும் நல்லது.

12 ராசியினரில் யாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களது தோற்றப்பொலிவு நாளுக்குநாள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஓர் நல்ல செய்தி வீடு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

செலவுகளை குறைக்க முடியாமல் சற்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சில உதவிகளைச் செய்வீர்கள். உணவு விஷயத்தில் கண்டிப்பாக கட்டுப்பாடாக இருப்பது மிகவும் நல்லது.

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் யாரையும் அனாவசியமாக பேசவேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். இருந்தாலும் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் உங்களுடைய சிந்தனை மாறுபடும்.

கடக ராசி நேயர்களே...!

சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்களை வாங்கி மகிழும் கூடிய நாளாக இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே..!

கௌரவம், புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது உங்களை வந்து சந்திப்பார்கள். முக்கிய நபர்கள் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி ஏற்படும். பணப்புழக்கம் தேவையான அளவுக்கு இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து திடீரென உங்களுக்கு உதவி கிடைக்கும். நாளுக்கு நாள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலை சுமை அதிகரிக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

விருச்சக ராசி நேயர்களே...!

நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும். சில வேலைகள் விரைவில் முடியும். வீடு மனை வாங்க முற்படுவீர்கள்.

 தனுசு ராசி நேயர்களே..!

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். உங்களது பேச்சை கேட்டு அனைவரும் நடந்து கொள்வார்கள்.

மகர ராசி நேயர்களே...!

இதுநாள்வரை உங்களிடமிருந்து அவர்களின் சுயரூபம் மெல்ல மெல்ல தெரிய வரும். நட்பு வழியில் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நினைவாகும். 

கும்ப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியம் ஒன்று மிக சிறப்பாக நடக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயமுண்டு. பண வரவு திருப்தியாக இருக்கும்.

மீனராசி நேயர்களே...!

பூர்வீக சொத்து பிரச்சினைகள் சுமூகமாக தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். சகோதர வகையில் நன்மை பயக்கும்.

click me!