கொரோனா எதிரொலி...! அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..!

By ezhil mozhiFirst Published Feb 3, 2020, 6:49 PM IST
Highlights

தமிழகத்தில் யாருக்கும் கருணை வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்தின் பேரில் அறிகுறிகளுடன் காணப்படுபவரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

கொரோனா எதிரொலி...! அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..! 

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் அமைப்பு அவசர நிலையையும் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் யாருக்கும் கருணை வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகத்தின் பேரில் அறிகுறிகளுடன் காணப்படுபவரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தில் மற்றும் 13 பேருக்கு கரோனோ வைரஸ் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களுக்கு ரத்த மாதிரிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இதுவரை கரோனோ வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவர்களின் இரத்த மாதிரிகளை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில்  பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார். 

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புக்காக சீனாவில் இருந்து இந்தியா வருபர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த இ-விசா தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் கேரளாவில் ஒரே ஒரு நபருக்கு கரோனா வைரஸ் பாஸிட்டிவ் வந்துள்ளதால் அவருடன் வந்த ஒரு பெண்ணையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும், அவருடைய ரத்த மாதிரியும் சோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சீனாவில் இருந்து வருகை தந்த 878 பேர் மற்றும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்த 270 பேர் என மொத்தம் சேர்த்து 1150 பேருக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

சீனாவில் பயின்று வந்த தமிழக மாணவர்கள் 53 பேரை தனி விமானம் மூலம் டெல்லி வரவழைக்கப்பட்டு அங்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை அவர்கள் யாருக்கும் கொரோனா தாக்கம் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. எனவே தமிழக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. பீதி அடைய வேண்டாம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்

click me!