5,8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து ..! மக்களின் கோரிக்கையை ஏற்றது அரசு..! குஷியில் மாணவர்கள்...!

By ezhil mozhiFirst Published Feb 4, 2020, 1:59 PM IST
Highlights

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.

5,8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து ..! மக்களின் கோரிக்கையை ஏற்றது அரசு..!  குஷியில் மாணவர்கள்...! 

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் குஷியில் உள்ளனர். 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் இந்த சிறுவயதிலேயே பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அது பெரிய மன அழுத்தத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் மாபெரும் மன அழுத்தமாக மாறும் என பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கும் போது, மாணவர்களின் திறனை மேம்படுத்துவதுவதற்காக தான் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது என்றும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை ஒரு முறை நடைமுறைபடுத்தி பார்த்தல் தான் முழுமையான ஒரு ரிசல்ட் நமக்கு தெரியும் என அமைச்சர் செங்கட்டையன் தெரிவித்து  இருந்தார். 

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!