சாணக்கிய நீதி : ஆண்களே.. இந்த 4 விஷயங்களை உங்கள் மனைவியிடம் தெரியாமல் கூட சொல்லிடாதீங்க.. அவ்ளோதான்!

By Kalai Selvi  |  First Published Jul 12, 2024, 9:15 PM IST

Chanakya Niti  : திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், சாணக்கியரின் நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.


ஆச்சாரியார் சாணக்கியருக்கு அரசியல், ராஜதந்திரம் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு மட்டுமல்ல, வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் மந்திரமும் இருந்தது தெரியுமா? இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப பயனுள்ள பல கொள்கைகளையும் அவர் வழங்கியுள்ளார். அந்தவகையில், திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், சாணக்கியரின் நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்களை பின்பற்ற வேண்டியது அவசியம். 

அவற்றில் ஒன்றுதான் மனைவியிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள். ஒவ்வொரு கணவனும் அவசியம் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதை மனைவியுடன் பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்கிறார் சாணக்யா. அப்படியானால், மனைவியிடம் மறக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இப்போது இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  உங்க கையில் பணம் செழிப்பா இருக்கணுமா? ரொம்ப சிம்பிளான இந்த வழிபாடு பண்ணினால் போதும்... பணம் கொட்டும்!!

மனைவியிடம் மறைக்க வேண்டிய விஷயங்கள்:

1. வருமானம் பற்றி சொல்ல வேண்டாம்:
சாணக்கியரின் கொள்கையின்படி, கணவன் தன் சம்பாத்தியத்தை பற்றி முழு விவரத்தையும் தன் மனைவியிடம் ஒருபோதும் சொல்லவே கூடாதாம். ஏனெனில், கணவனுக்கு அதிக வருமானம் இருக்கும்போது மனைவி அதிகமாக செலவு செய்ய வாய்ப்பு அதிகம். இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் மற்றும் சேமிப்பும் தாங்காது. குறிப்பாக இதனால் நீங்கள் கடினமான காலங்களில் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார்.

2. அவமானம் பற்றி சொல்லாதே!
சாணக்கியரின் நெறிமுறைகளின் படி, கணவன் தன் மனைவியிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி ஒருபோதும் சொல்லவே கூடாது. ஏனெனில், கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை எந்த மனைவியாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. மேலும், அதை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் மற்றும்பழி வாங்காமல் அவளால் நிம்மதியாய் இருக்க முடியாது. இதனால் வீண் சச்சரவுகள் தான் அதிகரிக்கும். எனவே, அவமானங்கள் அல்லது சண்டைகள் பற்றி உங்கள் மனைவியிடம் ஒருபோதும் சொல்லாதீர்கள்.

இதையும் படிங்க:   இந்த குணம் இருக்கவங்க ஒருநாளும் பணக்காரங்க ஆக முடியாது... உங்க கிட்ட இருந்தா உடனே மாத்திக்கங்க!! 

3. பலவீனங்களை மறையுங்கள்..
ஆச்சாரியா சாணக்கியாவின் நெறிமுறைகள் படி, கணவன் தனது பலவீனங்களை மனைவியிடம் இருந்து எப்போதும் மறைக்க வேண்டும்.  ஏனெனில், சில சமயங்களில் மனைவியும் கணவனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு தனது வேலையை முடித்து விடுவாள். இது வீட்டிலும், சமூகத்திலும் அவமானத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

4. நன்கொடை கொடுத்தது:
ரகசியதானம் மகத்தான தானம் என்று சொல்லப்படுகிறது. ஒரு கையால் கொடுப்பது, மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப தானம் செய்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆச்சார்யா சாணக்யா, நன்கொடை கொடுத்த தகவலை பற்றியும் கணவன் தனது மனைவியிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று அவர் 
சொல்லுகிறார். ஏனென்றால், மனைவியிடம் தர்மம் பற்றி சொன்னால் அதன் முக்கியத்துவம் இல்லாமல் போகலாம் என்பதால் தான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!