AC power saving tips: கோடைக்காலத்தில் எவ்வளவு நேரம் ஏசி ஓடினாலும் குறைவான ஈ.பி. பில் வருவதற்கு சில வழிகள் உள்ளன. ஆனால், மின்சாரக் கட்டணம் குறைவதற்கு சில விஷயங்களில் சிக்கனமாகவும் இருக்க வேண்டும்.
வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் மக்கள் அதிக சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். வெயிலில் இளைப்பாற ஃபேன், ஏசி, பிரிட்ஜ் போன்ற அதிகம் பயன்படுத்துவதால் மின்கட்டணம் உயரும். குறிப்பாக ஏசி பயன்பாடு மின் கட்டண உயர்வு முக்கியக் காரணமாக இருக்கும்.
ஆனால், கோடைக்காலத்தில் எவ்வளவு நேரம் ஏசி ஓடினாலும் குறைவான ஈ.பி. பில் வருவதற்கு சில வழிகள் உள்ளன. ஆனால், மின்சாரக் கட்டணம் குறைவதற்கு சில விஷயங்களில் சிக்கனமாகவும் இருக்க வேண்டும்.
தேவையற்ற நேரங்களில் கண்டிப்பாக ஏசியை ஆஃப் செய்ய வேண்டும். மெயின் சுவிட்சை அணைக்காமல், ரிமோட் மூலம் மட்டும் ஆஃப் செய்யக்கூடாது. பயன்படுத்தாத நேரத்தில் ஏசியின் மெயின் சுவிட்சை அணைத்து வைக்க வேண்டும்.
ஏசியை சரியான வெப்பநிலை வைத்து பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக 24 டிகிரி வெப்பநிலையில் இருப்பது சரியாக இருக்கும். இதன் மூலம் 6 சதவீதம் வரை மின்சார பயன்பாடு குறையும்.
சொந்த வீடு வாங்க வெறும் 84 ரூபாய் இருந்தா போதும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்கு!
ஏசியை நீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்துவிட்டு வெயில் காலம் வந்ததும் ஏசியை பயன்படுத்தும்போது, சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் மின்சாரச் செலவும் குறையும். ஏசியும் பழுது ஏற்படாமல் இயங்கும்.
ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கக் கூடாது. இதனால், ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறி, அறை குளிர்ச்சி அடைய தாமதம் ஆகும். இதனால் மின் நுகர்வு அதிகரித்து மின்சாரக் கட்டணமும் கூடும்.
ஏசியுடன் மின் விசிறியையும் பயன்படுத்தினால் அறை விரைவாகக் குளிர்ந்து விடும். ஏசியால் வரும் குளிர்ந்த காற்றை ஃபேன் அறை முழுவதும் பரப்பி வேகமாகக் குளிர்விக்கும். இதனால் ஏசி இயங்கும் நேரத்தைக் குறைக்கலாம்.
இப்போது மின்சாரத்தைச் சேமிக்கும் இன்வெர்ட்டர் ஏசி விற்னைக்கு வந்துவிட்டது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதிக பராமரிப்புச் செலவு இல்லாத ஏசியை வாங்குவது நல்லது. ஏசியில் உள்ள வெவ்வேறு மோட்களை சரியாக பயன்படுத்தினாலும் ஓரளவு மின்கட்டணம் குறையும்.
சம்மர் சேலுக்காக விலையைக் குறைத்த ஸ்கோடா! கோடியாக் காருக்கு செம டிஸ்கவுண்ட் இருக்கு!