கண்டுபிடிக்கப்பட்ட கலப்பட "செக்கு எண்ணெய்"..! உடனடியாக மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

thenmozhi g   | Asianet News
Published : Dec 20, 2019, 07:22 PM ISTUpdated : Dec 21, 2019, 03:50 PM IST
கண்டுபிடிக்கப்பட்ட கலப்பட "செக்கு எண்ணெய்"..! உடனடியாக மக்கள் செய்ய வேண்டியது என்ன..?

சுருக்கம்

இயற்கை முறையில் எந்த ஒரு வேதிப்பொருள் கலப்படம் இன்றி, பாரம்பரிய முறையில் சமையல் எண்ணெய் தயாரிக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் சென்னை மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பல கடைகள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    

கண்டுப்பிடிக்கப்பட்ட கலப்பட "செக்கு எண்ணெய்"..! உடனடியாக மக்கள் செய்ய வேண்டியது என்ன..? 

சமையல் செய்ய மிக முக்கியமான ஒன்று எண்ணெய். சமையல் எண்ணெய் இல்லாமல் எந்த ஒரு உணவை சமைப்பதும் மிகவும் கடினமே. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சமையல் எண்ணெய் இல்லாவிட்டால், வீட்டில் கையும் ஓடாது காலும் ஓடாது.

அந்த அளவில் நம் உணர்வோடு இரண்டறக் கலந்துவிட்ட சமையல் எண்ணெய்யிலும் கலப்படம் உள்ளது என்றால், எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது என்று சிந்தித்துப்பாருங்கள். இது போன்று எண்ணெயிலும் கலப்படம் செய்வவதால் உயிருக்கே உலைவைக்கும் பெரும்  ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்விலும் தெரிய வந்துள்ளது

குறிப்பாக இயற்கை முறையில் எந்த ஒரு வேதிப்பொருள் கலப்படம் இன்றி, பாரம்பரிய முறையில் சமையல் எண்ணெய் தயாரிக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தில் சென்னை மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பல கடைகள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   

இது குறித்து பிரபல உணவியல் நிபுணர் தாரணி கிருஷ்ணன் தெரிவிக்கும் போது, 

சமையலுக்கு தேவையான கடலை எண்ணெய், உதாரணத்திற்கு ரூ.200 என எடுத்துக்கொண்டால், செக்கு எண்ணெய் அதைவிட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் மரச்செக்கு எண்ணெய் என்ற பெயரில் பாட்டிலில் விற்கப்படும் எண்ணெய்யின் விலை ரூ.100 க்கு  விற்கப்படுகிறது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் கலப்பட எண்ணெய் தான் விற்கிறார்கள் என...

இந்த விவரம் அறிந்த இல்லத்தரசிகளும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், பாட்டிலில் விற்கிற எண்ணெய் சுத்தமானது என பலரும் நினைக்கின்றனர். ஆனால் மரச்செக்கு ஆட்டுகிற இடத்திற்கு சென்று வாங்கினால் தான் அது தூய்மையான எண்ணெய்யாக இருக்க முடியும், நாம் நம்பி வாங்கும் எண்ணெய்யிலும் கலப்படம் உள்ளது" என சொல்லி வருத்தப்படுகின்றனர். 

இது குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கழகத்தின் சார்பாக நடத்தப்படும் இலவச சோதனை மூலம் உணவு பொருட்களில் இருக்கும் கலப்படத்தை பிரித்தறிந்து தெரிவிப்பதால் நேரடியாக சென்று பார்த்தோம்.

இதற்காக மார்க்கெட்டில் இருந்து எண்ணெய் பாட்டில் வாங்கி சென்று சோதனை செய்து பார்த்ததில், நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனம் அதிகம் இருப்பதும், ஒரு சில வேதிப்பொருட்களை சேர்த்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தூய்மையான  எண்ணெய்யில் எந்த நிறமாற்றமும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் செக்கு எண்ணெய் என்ற பெயரில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் எண்ணெய்யிலும் கலப்படம் உள்ளது என்பது நிருபணமாகி உள்ளது.

இவ்வாறு எண்ணெய் விற்பவர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (Food Safety and Standards Authority of India) இடம் உரிய சான்றிதழ் பெற்று தான் விற்கிறார்களா என்பது சந்தேகமே... எனவே உணவு பொருட்களில் கலப்படம் உள்ளது என்ற சந்தேகம் எழுந்தால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உணவு பாதுகாப்பு கழகம் சார்பாக வெளியிட்டு உள்ள 94440 42322 என்ற எண்ணிற்கு போன் செய்து தெரிவிக்கலாம் என்கிறார் அரசு அதிகாரி. அதே போன்று, எண்ணெய் வாங்கும் முன்பு அதனை ஒரு முறை சோதனை செய்துய்க்கொண்டு பின் வரும் நாட்களில் பயன்படுத்தலாம் என்கின்றனர் நம் நலம் விரும்பிகளும் அரசு அதிகாரிகளும்...!

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதற்கு ஏற்ப கலப்பட உணவை பிரித்தறிந்து இயற்கையாக தயாரிக்கப்படும் தூய்மையான உணவு பொருட்களை உண்டு பல்லாண்டு வாழலாமே...
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்