உதவி கமிஷனர் பாடிய தேசியகீதம்..! நாட்டுப்பற்று முன் தோற்றுப் போன ஜாதி மதம் இனம் பாகுபாடு..! ஓரே நொடியில் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்..!

By ezhil mozhiFirst Published Dec 20, 2019, 1:28 PM IST
Highlights

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள இந்த ஒரு தருணத்தில், பெங்களூரு டெல்லி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
 

ஆக்ரோஷமான போராட்டக்காரர்கள் புன்னகையோடு கலைந்து சென்ற சுவாரஸ்யம் ..! 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள இந்த ஒரு தருணத்தில், பெங்களூரு டெல்லி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

இந்த ஒரு நிலையில் பெங்களூருவின் டவுன்ஹால் பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பெங்களூரு மத்திய போலீஸ் துணை கமிஷனர் சேத்தன் சிங் ரத்தோர். ஆனால் எவ்வளவு சொல்லியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஒருகட்டத்தில் தொடர்ந்து விளக்கமளித்த துணை கமிஷனர் சமூக விரோதிகளும் பல போராட்டங்களில் உள்நுழைந்து தங்களுடைய சுய லாபத்திற்காக வேறு வகைகளில் திசை திருப்புவார்கள். மேலும் வன்முறையை தூண்டி அப்பாவி பொதுமக்களுக்கு பல ஆபத்துகளை விளைவிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டிருந்தார். இருந்த போதிலும் இதனை சற்று ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மத்தியில் திடீரென தேசிய கீதத்தை பாட தொடங்கினார் சேத்தன் சிங் ரத்தோர்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக அங்கிருந்து எழுந்து நின்று அனைவரும் ஒன்றாக, துணை கமிஷனர் சேத்தன் சிங்குடன் சேர்ந்து தேசிய கீதத்தை பாடி அமைதியாக சிரித்த முகத்தோடு கலைந்து சென்றனர்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தக்க சமயத்தில் துணை கமிஷனரின் புத்திசாலித்தனமான இந்த ஒரு நடவடிக்கை அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றதோடு பொதுமக்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிகழ்வு நாட்டுப்பற்று முன் ஜாதி மதம் இனம் பாகுபாடு தோற்றுபோனது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்து உள்ளது. அதன் பின்னர் ஓரே நொடியில் போராட்டக்கார்கள் புன்னகையோடு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

click me!