லீக்கானது அருள் அண்ணாச்சியின் நடன வீடியோ..! என்னமா ரொமான்ஸ்,டான்ஸ் பண்றாரு பாருங்க..! ஷாக்கான ரசிகர்கள்..!

By ezhil mozhiFirst Published Dec 20, 2019, 12:17 PM IST
Highlights

தொடக்கத்தில் நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். 

வெளியானது அருள் அண்ணாச்சியின் நடிப்பு வீடியோ..! என்னமா ரொமான்ஸ் பண்றாரு பாருங்க..! ரசிகர்கள் குதூகலம்..! 

சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி நடித்து வரும் படத்தின் சில புகைப்படம் தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து  உள்ளது

தொடக்கத்தில் நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையில் பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர்.

 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு இணையாக அடுத்தடுத்து விளம்பரப்படங்களில் தோன்றினார். இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில்  சினிமாவில் ஹீரோவாகி விட்டார். இதற்கிடையில் உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து, மாநில தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக போஸ்டர் ஓட்டப்பட்டு உள்ளது.

அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரசிகர நற்பணி மன்றத்தின் சார்பாக உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் என தலைப்பிடப்பட்ட போஸ்டர் அடித்து தூத்துக்குடி முழுதும் ஆங்காங்கு ஒட்டப்பட்டு உள்ளது. 

தற்போது மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் வருவதற்கு முன்பாகவே, இந்த ரசிகர் மன்றம் வைத்து இப்போதே பிரபலப்படுத்த  ஆட்கள் ரெடியாகி விட்டனர். இதன் மூலம் அஜித் விஜய் ரஜினி ரசிகர்ளுக்கே அதிக டஃப் கொடுப்பார் போல இருக்கு சரவணா ஸ்டார் அண்ணாச்சி என பலரும் விமசரன் செய்ய  தொடங்கி விட்டனர். 

இப்படி ஒரு தருணத்தில், Legend saravanan வழங்கும், Production No -1, Movie-யின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி, பங்கேற்று நடனமாடும் காட்சி வெளியாகி  உள்ளது. 

ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இதில் ஒவ்வொரு காட்சியிலும் Legend சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தாராம். அப்படி என்றால் முதல் படமே வெற்றி தான் என்கின்றனர் விமர்சகர்கள் 
 

click me!