வேரோடு சாய்ந்தாலும் காய்த்து குலுங்கும்.. "அதிர வைக்கும் அத்திமர அதிசயம்"..!

By ezhil mozhi  |  First Published Jul 13, 2019, 6:01 PM IST

மணப்பாறை அருகே உள்ளது குமரி கட்டி என்ற வனப்பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் விவசாயி பழனிச்சாமிக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது தான் ஓர் அத்திமரம்.


வேரோடு சாய்ந்தாலும் காய்த்து குலுங்கும் அதிர வைக்கும் அத்திமர அதிசயம்..! 

மணப்பாறை அருகே உள்ளது குமரி கட்டி என்ற வனப்பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் விவசாயி பழனிச்சாமிக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது தான் ஓர் அத்திமரம். இந்த அத்திமரம் கடந்த கஜா புயலின்போது வேரோடு சாய்ந்தது. ஆனால் மீண்டும் மழை பெய்தபோது உயிர்பித்து தற்போது அத்தி காய் காய்த்து குலுங்குகின்றன.

Latest Videos

undefined

அத்தி மரத்தை பொறுத்த வரையில் சுக்கிரனுக்கு ஒப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுவது படுவது வழக்கம். மேலும் நல்ல நீரோட்டம் உள்ள இடத்தில்தான் அத்தி மரம் வளரும் என்பது ஐதீகம். இந்த அத்தி மரம் தனியாக இல்லை... இரண்டு மரங்களாக பின்னிப்பிணைந்து உள்ளது. அதில் ஒன்று ஆண் மரம் என்றும், இன்னொன்று பெண் மரம் என்றும் கூறப்படுகிறது. தற்போது பெண் மரத்தில் மட்டும் அத்திக்காய் காய்த்து குலுங்குகிறது.

இந்த மரத்தின் மிகச்சிறப்பு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது காய்த்துக் குலுங்குகிறது என்பதே மேலும், சித்தர்களுக்கு ஏற்ற மரம் அத்திமரம் என்பதால் இத்தகைய சிறப்பு வாய்ந்த அத்தி மரத்தை பார்ப்பதற்காக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அத்திக் காயை பறித்து செல்வதற்கும் வணங்குவதற்கும் வருகின்றனர். மேலும் மிகுந்த சக்திவாய்ந்த அத்திமரம் இது என அனைவராலும் போற்றப்படுகிறது. 

click me!