ஸ்தம்பித்து நிற்கும் காஞ்சிபுரம்..! சனிக்கிழமை சிறப்பாக... 2 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடல்..!

Published : Jul 13, 2019, 04:35 PM IST
ஸ்தம்பித்து நிற்கும் காஞ்சிபுரம்..! சனிக்கிழமை சிறப்பாக... 2 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடல்..!

சுருக்கம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் இன்றோடு பதின்மூன்றாவது நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

ஸ்தம்பித்து நிற்கும் காஞ்சிபுரம்..! சனிக்கிழமை சிறப்பாக 2 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடல்..! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் இன்றோடு பதின்மூன்றாவது நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகி உள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இன்று வார விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு உகந்த தினம் என்பதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காஞ்சிபுரத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூபாய் 500 கட்டணத்தில் விஐபி வரிசையில் கூட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருப்பதாகவும், பொது வரிசையில் செல்பவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை நின்று கொண்டு காத்திருப்பதாகவும் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது.

கடந்த 12 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bra for Sagging Breasts : பெண்களே! தொய்வான மார்பகங்களுக்கு கரெக்டான 'பிரா' இதுதான்... நோட் பண்ணிக்கோங்க
Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?