
திருப்பதி அருகே காதலனை செருப்பால் அடித்து உதைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது....
கர்னூல் மாவட்டம், திகுவ பாவை கிராமத்தை சேர்ந்தவர் திவ்யபாவை.இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து,ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
கால தாமதம்
இந்நிலையில்,தோரோமணம் செய்து கொள்ளுமாறு சந்திர சேகரிடம் பல நாட்களாக சொல்லி வந்துள்ளார் திவ்ய பாவை.இதற்கெல்லாம் செவி காய்க்காமல் இருந்த சந்திர சேகரிடம் சற்று கோபமாக பேசி உள்ளார்.இப்படியே சண்டை ஏற்பட,கடைசியில் தன்னுடைய வாய் கொழுப்பால்,கல்யாணம் பண்ணிக்க முடியாது என்ன செய்வனு சந்திர சேகர் கேட்க...
"இரவு மட்டும் பெண் சுகம் சேவை...அதுவும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் இத்தனை நாட்களாக வாழ்ந்து வந்ததற்கு என்னடா அர்த்தம் னு, சும்மா பெரட்டி பெரட்டி உருட்டி உருட்டி அடித்து, செருப்பே பிஞ்சி போகும் அளவிற்கு அடித்து துவைத்து எடுத்துள்ளார் உண்மையான காதலி...
உறவினர் மத்தியில் செருப்பால் அடி அடி..செம அடி...
காதலி காதலனை செருப்பால் அடிப்பதை கண்ட அவரது உறவினர்கள் நடுவில் வக்காலதிற்கு வர, அவருக்கும் விழுந்துள்ளது செருப்படி...
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த திவ்யா பாவையை, போலீசார் சமாதானம் செய்துகாதலனையும், சமாதானம் செய்து இருவருக்கும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஊரே வாய் மூடவில்லையாம்....அப்படியானு வாய் பிளந்துக்கொண்டு கதை பேச தொடங்கி உள்ளனர்
இதில் என்னடா ஒரு அழகு என்றால்,திவ்யா பாவையை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.திவ்ய பாவை செருப்பால் அடித்தது தவறே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆக மொத்தத்தில்,கடைசியில் இருவரும் செய்துகொண்டனர்..."மாங்கல்யம் தந்து ஞானேனா.....னு சொல்லி கெட்டி மேளம் கொட்டியது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.