ஒற்றை சொல்" தாலி"..! பெண்களின் கழுத்தில் மஞ்சள்...சுவாரஸ்யம்..!

 
Published : Jan 08, 2018, 05:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ஒற்றை சொல்" தாலி"..! பெண்களின் கழுத்தில் மஞ்சள்...சுவாரஸ்யம்..!

சுருக்கம்

9 aspects of thaali in marriage

தாலியைப் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள் !!

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்!

தாலி கட்டினால்  தான்  தம்பதிகளாக முடியும்.தாலி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம்  வாய்ந்தது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே....

இதையும் தாண்டி நாம் அறியாத பல தகவல்கள் இருக்கின்றது .. என்னவென்று பார்க்கலாமா..?

தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளம் ஆகும்.

தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல.. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.இன்னமும் வசதி இல்லாத  பல பெண்கள் மஞ்சளை தாலி கயிற்றில் கட்டி, கழுத்தில் இன்பமாக சுமக்கின்றனர்

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது. தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் தாலம் என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது

 பதினோராம் நு}ற்றாண்டில்தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழர் திருமணம் என்கிற புத்தகம்.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது :

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நூல் இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு.

தெய்வீகக் குணம்

தூய்மைக் குணம்

தொண்டு

தன்னடக்கம்

ஆற்றல்

விவேகம்

உண்மை

உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்

மேன்மை.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது என்பது  வரலாறு.நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும்,தாலி என்பது இத்தனை அபூர்வமானது  என்று....
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை