High Cholesterol : 40 வயதிற்கு பிறகு கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க, தவிர்க்க வேண்டிய 8 உணவுகள் இங்கே..
கொலஸ்ட்ரால் பிரச்சனை இன்று வேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. கொலஸ்ட்ரால் என்பது நமது ரத்தத்தில் காணப்படும் ஒரு மூலப்பொருளாகும். அது அதிகமாக அதிகரிக்கும் போது, நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் குவிந்து விடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிப்படையும் மற்றும் பல உறுப்புகளின் செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது மாரடைப்பு போன்ற அபாகரமான நிலைமைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு முக்கிய காரணம் மோசமான உணவு பழக்கங்கள் தான்.
அந்த வகையில், 40 வயதிற்கு பிறகு நீங்கள் சில உணவுப் பொருட்களை சாப்பிட்டால் அது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்து, மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: தொப்பையை குறைக்க.. யாரும் சொல்லாத ரகசியம்... உதவும் 5 எண்ணெய்கள்!!
40 வயதிற்கு பிறகு தவிர்க்க வேண்டிய 8 உணவுகள் :
1. ஜங்க் ஃபுட் :
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், உங்களுக்கு 40 வயசு ஆகிவிட்டால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனெனில், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் உருவாவதற்கு இது முக்கிய காரணமாகும்.
2. பொரித்த உணவுகள் :
பொறித்த உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், இது அரிகத்திற்கு நல்லதல்ல. காரணம், இது கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவற்றிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது.
3. சிவப்பு இறைச்சி :
மாட்டிறைச்சி, ஆட்டிறச்சி, பன்றி இறைச்சி போன்று சிவப்பு இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால், இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை விரைவாக அதிகரிக்கச் செய்யும். எனவே, இவற்றை நீங்கள் அளவோடு சாப்பிடுங்கள். இல்லையெனில், முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை மளமளவென கரைக்கும் கருஞ்சீரகம்.. எப்படி சாப்பிடனும் தெரியுமா..?
4. பதப்படுத்தப்பட்ட இறைச்சி :
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு சோடியம் மற்றும் நிறைவேற்றுக் கொழுப்பு உள்ளதால் இதுவும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதுமட்டுமின்றி, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே, இவற்றை நீங்கள் ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
5. முட்டையின் மஞ்சள் கரு :
முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவு கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளதால், அதை நீங்கள் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
6. பதப்படுத்தப்பட்ட பானங்கள் :
குளிர்பானங்கள், சோடா, பதப்படுத்தப்பட்ட பழ சாறுகள் மற்றும் பிற பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால், இவற்றை குடித்தால் எடையுடன் கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும்.
7. பால் பொருட்கள் :
சீஸ், வெண்ணெய் போன்ற பால் பொருட்களில் அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளதால், இவற்றையும் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.
8. இனிப்புகள் :
கேக்குகள், குக்கீஸ்கள் போன்ற பொருட்களில் சர்க்கரையின் உள்ளடக்கம் அதிகம் உள்ளது. இதை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும். எனவே, இவற்றை சாப்பிட்டுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D