அறிவியல்ரீதியாக  முட்டையை சைவம் என்கிறார்கள். ஏன் தெரியுமா? 

Published : Aug 30, 2024, 10:14 AM IST
அறிவியல்ரீதியாக  முட்டையை சைவம் என்கிறார்கள். ஏன் தெரியுமா? 

சுருக்கம்

Egg Vegetarian Or Non Vegetarian : முட்டை சைவமா, அசைவமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்தால் அந்த சந்தேகம் இன்றே தீர்ந்துவிடும்

 சைவ உணவு உண்பவர்கள் முட்டையை அசைவம் என நினைத்து ஒதுக்கிவிடுகிறார்கள்.  இதனால் அவர்களுக்கு தேவையான புரதச்சத்து, வைட்டமிம் பி12, ஓமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. பொதுவாக உணவுகளை சைவம் அசைவம் என பிரிப்பதற்கு அடிப்படை காரணம் உண்டு.

ரத்தமும் சதையுமாக உயிருள்ளவைகளை தான் அசைவம் என்பார்கள். தாவரங்கள் சுவாசித்தாலும் அவற்றிற்கு மேற்சொன்னபடி ரத்தமோ, சதையோ கிடையாது. ஆகவே அவை சைவம் என ஒரு வாதம் உண்டு. ஆனால் அது கோழியிடமிருந்து வருவதால் அது அசைவம் தான் என்றொரு வாதமும் உள்ளது. 

கோழியிடமிருந்து தான் முட்டை வருகிறது என்றாலும், அது கோழியை கொன்றுவிட்டு வருவதில்லை.  அப்படி பார்த்தால் பசு மாட்டிலிருந்து வரும் பாலும் அசைவம் தான். ஆனால் நாம் அப்படி சொல்வதில்லை. விலங்குகளின் சதையை கொண்டிராத எந்த உணவாகினும் அது சைவ உணவு தான். அந்த வகையில் பார்த்தால் முட்டை கூட சைவம் தான். முட்டை வெறும் கரு தானே தவிர அது உயிரல்ல. 

இதையும் படிங்க:  முட்டையால் இதயத்துக்கு கேடு வருமா? தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு என்ன ஆகும் தெரியுமா?

வெள்ளை கரு ஏன் சிறந்தது? 

முட்டையில் உள்ள வெள்ளை கரு தான் உண்பது ரொம்ப நல்லது. ஏனெனில் இதில் தசைகளை வலுவாக்கும் புரதம் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக இதில் விலங்கு செல்கள் எதுவுமே கிடையாது. அறிவியல்படி, இது சைவ வகை உணவு தான். 

மஞ்சள் கருவில் கொழுப்பும், புரதமும் இருந்தாலும் கொழுப்புதான் அதிகம் காணப்படுகிறது. மஞ்சள் கருவில் உள்ள கியூம செல்களை பிரித்தெடுப்பது கடினம் என்பதால் இது அசைவம் தான். அதனால் சைவ விரும்பிகள் வெள்ளை கரு மட்டும் உண்ணலாம். 

இதையும் படிங்க:  முட்டையை இப்படி சாப்பிட்டால் விஷத்திற்கு சமம்... எச்சரிக்கும் நிபுணர்கள்

முட்டை உண்பதால் பயன்கள்: 

கண்கள் ஆரோக்கியம்: 

முட்டையில் இருக்கும் லுடீன்,  ஸீக்ஸாக்தைன் போன்றவை கரோட்டினாய்டு பொருட்களை உள்ளடக்கியிருக்கும். இது   கருவிழி செயலிழப்பு ஏற்படுவதை தடுக்கும். இதனால் கண்கள் ஆரோக்கியம் மேம்படும்.  பாதுகாப்பும், ஆரோக்கியமும் கிடைக்கின்றன. கண் புரையும் தடுக்கப்படும். 

வைட்டமின் டி, கால்சியம்: 

உடலின் எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க தேவையான வைட்டமின் டி, கால்சியம் அவித்த முட்டையில் உள்ளது.  வைட்டமின் டி சத்து தான் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளும் பண்புள்ளது. முட்டை தொடர்ந்து உண்பதால் உடல் வலிமை பெறும்.  

எடை குறைப்பு: 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக அவித்த முட்டையின் வெள்ளை கருவை மட்டும் உண்ணலாம். வேறு உணவுகள் வேண்டும். முட்டையில் குறைந்த அளவிலான கலோரிகள் தான் உள்ளது.  காலையில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை சாப்பிடலாம். இதனால் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்கள் கிடைக்கின்றன. உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.

தினமும் ஒரு முட்டை கட்டாயம்: 

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொண்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளும் குறைகிறது. இரத்தம் உறைதல் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆய்வுகளும் தினமும் ஒரு முட்டை உண்பதை பரிந்துரைக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்