தேர்தலின் போது தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையா..?

By ezhil mozhiFirst Published Mar 11, 2019, 8:35 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க உள்ள தேர்தலின் தேதி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
 

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்க உள்ள தேர்தலின் தேதி மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி கடைசிநாள். வேட்புமனு பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடக்கிறது. மனுவை திரும்பப் பெற மார்ச் 29ம் தேதி கடைசிநாள். வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது.

தேர்தல் நடைபெறும் நாட்களான ஏப்.18 மற்றும் அடுத்து வரும் சில நாட்கள் விஷேச  நாட்கள் என்பதால் தொடர் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி, 

தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை என்றால் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தான்...

விடுமுறை நாட்கள் !

ஏப்.17-மகாவீரர் ஜெயந்தி

ஏப்.18- நாடாளுமன்ற தேர்தல்

ஏப்.19-புனிதவெள்ளி

ஏப்.20- சனி

ஏப்.21- ஞாயிறு விடுமுறை

வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்றால், தேர்தல் திருவிழா போன்றே மாறிவிடும் போல என இப்போதே வாட்ஸ்ஆப் மற்றும் முகநூலில் கருத்து தெரிவிக்க தொடங்கி விட்டனர். 

click me!