
2018 ஆங்கில புத்தாண்டு திங்கள் கிழமை பிறக்கிறது. 2017தான் ஒரு மாதிரியா போச்சு, 2018 ஆம் ஆண்டாவது நன்றாக இருக்க வேண்டுமே என்று நீங்கள் வேண்டிக் கொள்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படிங்க...
அஸ்வினி, பரணி , க்ருத்திகை 1ம் பாதம் முடிய உள்ள மேஷ ராசிக் காரங்க நீங்க என்றால்,
இந்த வருடத்தின் ஆரம்பம் உங்களுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. பிப்ரவரி 18ல் குரு அதிசாரமாக 8ஆம் இடத்துக்குச் செல்கிறார். என்றாலும், குரு தனது பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லதைச் செய்வார். ராசி நாதனும் சாதகமான நிலையில் இருக்கிறார். அதனால் உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் செல்வாக்கு மேம்படும். உங்களுக்கு பணம் காசு நன்றாகச் சேரும். உங்கள் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
எல்லாம் இருந்தாலும், ராகுவால் குடும்ப பிரச்னைகள் வந்து மனக் குழப்பம் ஏற்படலாம். கவனமாக இருங்கள். தற்போது ராகு 4ம் இடத்தில் இருக்கிறார். அவர் சற்றே சிரமத்தைக் கொடுப்பார். கேதுவால் நன்மைகள் நடந்தது என்றாலும் வரும் ஜூலைக்கு பிறகு அது குறையும். சனி பகவனால் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவரால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அவரது பார்வையால் ஓரளவு நன்மையே நடக்கும். அக்டோபர் மாதத்துக்குப் பின் நன்மை நடக்கும்.
புதிய தொழில் தொடங்கும் நிலை வரும். வளர்ச்சி ஏற்படும். மறைமுக போட்டி எதுவும் இருந்தால் முறியடிப்பீர்கள்.
உங்களுக்கு கடந்த காலத்தில் வேலையில் பணியிடத்தில் இருந்த மந்த நிலை எல்லாம் மாறும். ஒரு சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். வருமானம், பாராட்டு புகழ் எல்லாம் உண்டாகும். அரசியல்வாதிகள், பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள் எல்லாரும் நல்ல நிலையை காணலாம்.
மாணவ மணிகள் நன்றாகப் படிப்பார்கள். போட்டிகளில் வெற்றியும் பாராட்டும் கிட்டும். விவசாயிகளுக்கு லாபம் உண்டு. ஆனால், இந்த ஆண்டின் கடைசியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நஷ்டப் படலாம். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
ராகுவுக்கு அர்ச்சனை செய்து, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி அனுமனுக்கு துளசி மாலை சாறி வணங்கினால் துயர் குறைந்து வாழ்வில் வசந்தம் வீசும். வாழ்த்துகள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.