
வருகிற 2018 ஜன. 1 அன்று திங்கள் கிழமை. இந்த முறை, புத்தாண்டு தினம் கன்னி லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி 3ல் பலம் பெற்று இருக்கிறார். இரண்டாம் இடத்தில் குரு பகை, செவ்வாயுடன் இருக்கிறார். 4ல் சூரியன் சனி சுக்ரன் என மூன்று பலம் வாய்ந்த கிரகங்கள். 5ல் கேதுவும் 11ல் ராகுவும் இருக்க, 9ல் சந்திரன் இருக்கும் நிலையில் இந்த தினம் அமைகிறது.
பொதுவாக பார்க்கப் போனால், இந்த வருடம் அனைவருக்கும் ஓரளவு பரவாயில்லை ரகம் என்று சொல்லுகின்ற வருடமாகத்தான் இருக்கும்.
இத்தகைய கிரக சூழ்நிலையில், பொதுவாக நம் நாட்டுக்கு நல்லதும் தீயதும் கலந்தே இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு சில நன்மைகளும் தீமைகளும் கலந்து இருக்கும்.
மழை எதிர்பார்த்த அளவு பெய்யும். காய்கறி பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரிக்கும். இயந்திர சாதனங்களின் விலை அதிகரிக்கும்.
மாணவ மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நாட்டில் அரசியலில் குழப்பங்கள் நிலவும். வரும் பிப்ரவரி வரை அரசியல் குழப்பங்கள் இருந்தாலும் அதன் பின்னர் குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். மார்சில் அரசியல் நிலை சரியாகிவிடும்.
தமிழகத்தில் ஒரு நிரந்தர ஆட்சி அமைய வாய்ப்பு அதிகம் உண்டு. தமிழகத்தைப் பொருத்தவரை கொஞ்சம் குழப்பங்களும் பிரச்சனைகளும் நீடித்தே இருக்கும் என்று சொல்லலாம். மக்கள் சில சிரமங்களைச் சந்திப்பர். குறிப்பாக, நடுத்தர வர்க்க மக்கள் சற்று பாதிக்கப் படுவர்.
அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும். சனி நன்றாக இருந்தாலும் குருவின் பார்வை பலம் தந்தாலும் 5ல் நின்ற கேது மக்களுக்கு மன ரீதியான சில பாதிப்புகளை உண்டாக்குவார்.
கேதுவின் தன்மையால் மக்களிடம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். நிலம் தொடர்புடைய ரியல் எஸ்டேட் தொழிலில் மந்த நிலையும் சரிவும் ஏற்படும்.
விவசாயம் நன்றாக இருக்கும். மழை சரியான வகையில் பெய்யும் என்பதால், அறுவடை பாதிப்பு இருக்காது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.