மாணவர்களே தயாராகுங்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..!

By ezhil mozhiFirst Published Apr 20, 2020, 4:15 PM IST
Highlights

சிபிஎஸ்இ பள்ளிகளும் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து இதே முடிவில் தான் இருக்கின்றன. மற்ற மாநிலங்களும் பத்தாம் வகுப்பு தேர்தல் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன என்றும் மேற்கோள் காட்டினார்.
 

மாணவர்களே தயாராகுங்கள்..!  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 

ஊரடங்கு உத்தரவு முடிந்தபிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும் என்ற விவரத்தை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் பல கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பத்தாம் வகுப்பில் எடுக்கப்படும் மதிப்பெண்களை பொருத்து டிப்ளமா படிப்பு செல்வதற்கும், மற்ற ஒருசில படிப்புகளை தேர்வு செய்வதற்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் மிகவும் தேவைப்படுகிற. இதுதவிர டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கும் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் மிக மிக முக்கியம் எனவே கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும்.

சிபிஎஸ்இ பள்ளிகளும் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து இதே முடிவில் தான் இருக்கின்றன. மற்ற மாநிலங்களும் பத்தாம் வகுப்பு தேர்தல் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன என்றும் மேற்கோள் காட்டினார்.இது ஒரு பக்கமிருக்க வரும் மே 3ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியுமென்ற தருவாயில் அதற்குப்பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்வு நடத்தப்படும் காலம் கோடை காலம் என யாரும் விமர்சனம் வைக்க வேண்டாம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை இதற்கு முன் வந்ததில்லை. எனவே நிலைமைக்கு ஏற்ப தேர்வு நடத்துவது குறித்தும் எப்போது தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எனவே மாணவர்கள் எந்த நேரமும் தேர்வுக்கு தயாராக இருக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வு நடக்குமா என்ற கேள்விக்கு அதனை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

click me!