விதுர் நீதி: இம்மூவருக்கும் கடன் கொடுத்தால் எதுவும் திரும்ப வராது- யார் அவர்கள்?

By Dinesh TGFirst Published Sep 14, 2022, 11:01 PM IST
Highlights

மகாபாரத காலத்தின் புகழ்பெற்ற அறிஞராக அறியப்படுபவர் மகாத்மா விதுரர். இவர் விவேகம் நிறைந்தவராகவும், தீவிர புத்திக்கூர்மை உடையவர் மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். 

மகாபாரத காலத்தின் புகழ்பெற்ற அறிஞராக அறியப்படுபவர் மகாத்மா விதுரர். இவர் விவேகம் நிறைந்தவராகவும், தீவிர புத்திக்கூர்மை உடையவர் மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராகவும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவைப் போலவே, மகாத்மா விதுரரும் வேதவியாச முனிவரின் மகன் தான். ஆனால் ஒருவேறுபாடு உள்ளது. அதாவது திருதராஷ்டிரும் பாண்டுவும் இளவரசியின் வயிற்றில் பிறந்த மகன்கள். ஆனால் மகாத்மா விதுரர் பணிப்பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தார். விதுரனுக்கு அரசாட்சிக்கான அனைத்துத் தகுதிகளும் இருந்தபோதிலும், வேலைக்காரப் பெண்ணின் மகன் என்பதால் அவரை இளவரசராக அறிவிக்கவில்லை. எனினும் ஹஸ்தினாபுரத்தின் அரசனாக திருதராஷ்டிரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் முதன்மைச் செயலாளராக விதுரர் பதவி வகித்தார். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக விளங்கிய விதுரர், பணம், வீடு, அரசியல் போன்றவை தொடர்பாக தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மகாராஜா திருதராஷ்டிரர் தனது காலத்தில் அனைத்து விஷயங்களிலும் மகாத்மா விதுரரின் கருத்தை எடுத்துக் கொண்டதால், அவர் வெளியிட்ட கருத்து விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது. அவருடைய இந்த கருத்துரைகள் அந்த காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் செல்லுபடியாகும்.

இந்நிலையில் பண விவகாரம் தொடர்பாக விதுரர் சொன்ன கருத்துக்களை குறித்து விரிவாக பார்க்கலாம். விதுரரின் கூற்றுப்படி, மூன்று வகையான நபர்களுக்கு ஒருபோதும் பணம் அல்லது தர்மம் கைக்கொடுக்காது என்கிறார். ஏனென்றால் அவர்களுக்கு கொடுத்த பணம் நல்ல வழியில் பயன்படுத்தப்படாது, திரும்ப வராது என்கிற காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

சோம்பேறிகள் மூஞ்சில் விழிக்கக்கூடாது

எந்த வேலையும் செய்ய விரும்பாத சோம்பேறிக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று விதரர் கூறுகிறார். ஒரு சோம்பேறி தனக்கு கிடைத்த பணத்தை செலவழித்து மீண்டும் சோம்பலாகி விடுகிறான். அப்படிப்பட்ட நபருக்கு பணம் தருவது, அவரை மேலும் சோம்பேறியாக்கும். எனவே அவர்களுக்கு எந்த வடிவிலும் கடன் கொடுக்கக்கூடாது என்று விதுரர் கூறுகிறார். இப்படிப்பட்ட சோம்பேறிகள் எந்த வேலையும் செய்யாமல் மற்றவர்களை நம்பி பிழைப்பு நடத்துவார்கள். மேலும் அவர்களிடம் இருந்து கடன் திரும்ப வாங்குவதும் ஆபத்தமாக முடியும்.

துஷ்டனுடன் தொடர்பு கூடாது

விதுரர் கொள்கையின்படி, தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒருபோதும் கடன் கொடுக்கக்கூடாது என்கிறார். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். எந்தவிதமான தொடர்பும் அவர்களிடம் இருக்கக்கூடாது. ஏனென்றால் அவர்களுடனான உறவும் நம்மை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். அப்படிப்பட்ட நபர்களுக்கு கடன் கொடுப்பது, பாவத்தில் பங்குதாரராக மாறுவதற்கு சமம். நேர்மையற்றவர்களுக்கு பணம் கொடுப்பது நிச்சயமாக நல்ல பயன் இல்லை. மேலும் அவர்களிடம் இருந்தும் பணம் திரும்ப கைக்கு வராது என்று விதரர் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை கண்டு அஞ்சுவது ஏன்..? அச்சுறுத்தும் பின்னணி..!!
 

நம்பத்தகாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்

விதுரர் வெளியிட்டுள்ள கொள்கையின் படி, நம்பத்தகாதவர்களுக்கு கடன் வழங்கக்கூடாது என்பதை முக்கியத்துவப்படுத்தி கூறியுள்ளார். குறிப்பாக ஒருவர் தான் பின்பற்றும் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடன் கொடுப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பது விதுரரின் கருத்தாகவுள்ளது. நம்பிக்கையை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுவது குதிரை கொம்புதான் என்கிறார் விதுரர்.

click me!