தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ304 விலை குறைந்து சவரன் ரூ.26,248 விற்கப்படுகிறது.
தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ304 விலை குறைந்து சவரன் ரூ.26,248 விற்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தங்கத்தின் விலை உயரும் எனக் கருதப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.38 குறைந்து கிராம் 3,281 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 3438 ரூபாய்க்கும், ஒரு சவரன் 27 ஆயிரத்து 504 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து 40 ரூபாய் 60 பைசாவுக்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்த்கிருக்கிறது.