பியூட்டி பார்லர் வேண்டாம்! வீட்டிலேயே முகத்தை பளபளப்பாக்க சில வழிகள்!

By vinoth kumar  |  First Published Oct 26, 2018, 3:54 PM IST

பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை அழகு படுத்தும்போது பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாதவை


பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை அழகு படுத்தும்போது பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாதவை

பப்பாளி - லெமன் ஜூஸ்
 
பப்பாளியில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது. அரை பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கெட்டியாக அரைத்து அதனுடன் சிறிது லெமன் ஜூசை கலக்க வேண்டும் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை என செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம் 

Tap to resize

Latest Videos

க்ரீன் டீ - தேன்
 
க்ரீன் டீ சரும அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. க்ரீன் டீ பேக்கை வெட்டி பொடியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து 5-10 நிமிடங்கள் இருந்த பின் சாதாரண நீரில் கழுவவேண்டும் வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை காணலாம். 

பாதாம் - தேன் 

பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் சரும ஜொலிப்பை தருகின்றன. 10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து மிக்சியில் அரைக்க வேண்டும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவேண்டும். பின்னர் சாதாரண நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும். 

கற்றாழை ஜெல் - க்ரீன் டீ 

சரும ஜொலிப்பை அளிக்கும் விட்டமின்கள், மினரல்கள் கற்றாழையில் உள்ளன. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது. 2-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை மிக்ஸியில்அரைத்துக் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ பொடியை சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைக்கவேண்டும் இதை தினமும் பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும்.

click me!