Fashion Tips for Women : ஆண் பெண் என இருபாலருக்கும் பிடித்த ஆடை 'ஜீன்ஸ்'. ஜீன்ஸ் இல்லாமல் ஃபேஷன் உலகம் முழுமை அடைவதில்லை. அனைத்து வயதினரும் தங்களது வசதிக்காக ஜீன்ஸ் அணிகின்றனர்.
ஜீன்ஸ் சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடியது என்று பலரும் கருதுகின்றனர். உடல் அழகை எடுத்துக்காட்டும். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாக ஜீன்ஸ் அணிந்து செல்கின்றனர்.
இளம் பெண்களின் ஆடை விருப்பம் ஜீன்ஸ் ஆகத்தான் இருக்கிறது. பெண்கள் தங்களது உயரம், உடல் அமைப்பு, ஜீன்ஸ் எந்த அளவுக்கு வசதியாக இருக்கும் போன்ற விஷயங்களை முடிவு செய்த பின்னர்தான் ஜீன்ஸ் தேர்வு செய்ய வேண்டும். எப்படி பார்த்து வாங்கினாலும் சில நேரங்களில் ஏமாறுவது உண்டு. அதற்கு என்ன செய்யலாம்.
முதலில் பங்கு பெறுவது உடலமைப்பு. பெண்கள் தங்களது உடல் வாகைப் பொறுத்துதான் ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். மெல்லிய ஹிப் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி உடலமைப்பிற்கு ஏற்ற ஜீன்ஸ் தேர்வு செய்து அணிய வேண்டும்.
Fashion Tips: கருப்பா இருந்தாலும் களையா தெரியணுமா? ஒல்லிக்குச்சி உடம்புக்கு ஸ்டைலிஸ் டிரஸ் டிப்ஸ்!!
ஸ்கின்னி பிட் :
இந்த வகையான ஜீன்ஸ் தொடையுடன் இறுக்கமாக இருக்கும். பலவிதமான டாப்ஸ், ஸ்டைலான ஷூக்களுடன் இந்த ஜீனை அணியலாம் வெள்ளை சட்டையுடன் ஸ்கின்னி ஜீன் அணிந்தால் நன்றாக இருக்கும். கருப்பு க்ராப் டாப் பொருத்தமாக இருக்கும். ஸ்கின்னி பிட் அனைத்து உடல் வாகிற்கும் பொருந்தும். உயரம் குறைவாக இருப்பவர்கள் ஸ்கின்னி பிட் ஜீன்ஸ் தேர்வு செய்யலாம்.
வைடு-லெக்டு டெனிம்
அகலமான இடுப்பு கொண்ட பெண்கள் ஆடைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அகலமான இடுப்பு இருக்கும் பெண்கள் வைடு-லெக்டு ஜீன்ஸ் தேர்வு செய்யலாம். மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ்
பியர் வடிவப் பெண்களின் இடுப்புப் பகுதி பெரிதாக இருப்பதால், அதை மறைக்கும் விதத்தில் ஜீன்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வரிசையில் இவர்களுக்கு ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும்.
லோ-வெயிஸ்ட் ஜீன்ஸ்
ஆப்பிள் வடிவப் பெண்களின் தோள்பட்டை பெரிதாக இருக்கும். சற்றுப் பருமனாகத் தெரிவார்கள். இவர்கள் இறுக்கமான ஜீன்ஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது.
ஸ்ட்ரைட் லெக் ஜீன்ஸ்
லேசான தொப்பை, ஹெவி ஹிப்ஸ் இருக்கும் பெண்களுக்கு சில டெனிம் ஜீன்ஸ் மட்டும் தான் பொருந்தும். உடலமைப்பை மேம்படுத்திக் காட்டும் ஸ்ட்ரைட் லெக் ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். கொஞ்சம் உடல் எடை இருக்கும் பெண்கள் ஸ்ட்ரைட் லெக் ஜீன்ஸ் அணியலாம். இது கால்களையும் அழகாகக் காட்டும்.
எடுப்பான தோற்றம் தரும் ஜீன்ஸ்
லோ ரைஸ் ஜீன்ஸ் மெலிந்த உடல்வாகு உள்ளவர்களுக்கு நன்றாகப் பொருந்தும். மிட்-ரைஸ் ஜீன்ஸ் ஏறக்குறைய அனைத்து வகையான உடல் எடை இருப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். உருவத்திற்கு ஏற்றவாறு இது அமைந்து கொள்ளும். ஹை ரைஸ் ஜீன்ஸ் ஒல்லியான இடுப்பு கொண்ட பெண்களுக்கு பொருந்தும்.
எல்லா நேரமும் ஜீன்ஸ் அணியலாமா?
உடலமைப்பு மட்டுமின்றி உயரமும் முக்கியம். இது அறிந்தால் பொருத்தமான் ஜீன்ஸ் தேர்வு செய்யலாம். இது மிகவும் கம்ஃபோர்ட் தோற்றத்தைக் கொடுக்கும். அழகுடன் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு இல்லாத ஜீன்ஸ்களை தேர்வு செய்து அணிய வேண்டும். தொடர்ந்து ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியக் கூடாது. கோடைகாலத்தில் ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.