உலகே வியக்கும் படி நடைபெற்ற அனந்த் அம்பானி -ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் போது, மலர் துப்பட்டா மற்றும் லெஹங்காவை அணிந்து அசத்தினார். அதே போன்ற மலர் துப்பட்டாவை தற்றோது டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உருவாக்கியுள்ளார்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெறது. திருமணத்தையொட்டி ஜூலை 8ஆம் தேதி நடந்த ஹல்தி விழாவில், மஞ்சள் நிற லெஹங்கா சோலியில் பூவால் நெய்யப்பட்ட துப்பட்டாவை அணிந்து வந்து அசத்தினார்.
ராதிகா மெர்ச்சன்ட் அணிந்த பூவால் செய்யப்பட்ட துப்பட்டா மற்றும் லெஹங்கா சோலியை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூர் வடிவமைத்திருந்தார்.
இந்நிலையில், அதேபோன்ற மலர் துப்பட்டாவை செய்து காட்ட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஆருஷி பஹ்வா எண்ணினார். முன்றாயல் முடியாததும் உண்டோ, உடனடியாக களத்தில் இறங்கிய ஆருஷி, வெறும் 2000 ரூபாய் செலவில் 12 மணி நேர உழைப்பில் ஒரு அழகான மலர் துப்பட்டாவை செய்து முடித்துள்ளார்.
அதன் விரிவான வீடியோ ஆருஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் அவர் பூக்களை வாங்கியது முதல், அவற்றை ஒவ்வொன்றாக கோர்த்து துப்பட்டாவாக நெய்தது வரை காட்டியுள்ளார்.
undefined
கொள்ளை அழகில் மயக்கும் அம்பானி வீட்டு மருமகள்! பூவால் நெய்த ஆடையில் ராதிகா மெர்ச்சண்ட்!