Fashion Tips: கருப்பா இருந்தாலும் களையா தெரியணுமா? டிப்ஸ் இதோ!!

By Asianet Tamil  |  First Published Jul 25, 2024, 12:07 PM IST

கருப்பாக இருந்தாலும் களையாக தெரிய வேண்டும் என்பது பலருக்கும் ஆசை இருக்கும். கருப்பாக இருந்தாலும் பலரும் களையாக இருப்பார்கள்.இல்லாவிட்டாலும் எப்படி காட்டிக் கொள்வது என்று பார்க்கலாம்.


நாம் அணியும் ஆடைகள் தான் நமக்கு தன்னம்பிக்கையையும், கம்பீரத்தையும் கொடுக்கும். நல்ல நிறமாக இருப்பவர்களுக்கு ஒரு சில வண்ணங்களில் இருக்கும் ஆடைகள் பொருத்தமாக இருக்கும். அதேபோல் கருப்புநிறத்தில் இருப்பவார்களுக்கும் சில ஆடைகள் தான் பொருத்தமாக இருக்கும். 

களையான தோற்றம்
டஸ்கி ஸ்கின் கொண்ட ஒல்லியான உடல் அமைப்பு கொண்ட பெண்கள் உடல் வாகுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். தூய பருத்தி முதல் பளபளப்பான ஜார்ஜெட் வரை ஏகப்பட்ட துணி வகைகள் உள்ளன. எனவே, உடல்வாகுக்கு ஏற்ற துணியை தேர்வு செய்வது  அவசியம்.

ஒல்லி உடல் அமைப்பு
ஒல்லியான தோற்றம் கொண்ட பெண்கள் கொஞ்சம் குண்டாக காட்டும் வகையில் ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். இதுமாதிரியான ஆடைகள் மெலிந்த தோற்றத்தை கூட்டிக் காட்டும். அடர் வண்ணங்களை தேர்வு செய்ய வேண்டும். 

ஸ்டைலான தோற்றம்
மெலிந்த தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அடுக்கு ஆடைகளை அணியலாம். இது ஸ்டைலான தோற்றத்தை கொடுக்கும். ஒல்லியான உடல்வாகையும் குண்டாக காட்டும். 

தளர்வான ஆடைகள்
ஒல்லியான பெண்கள் எப்போதுமே இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். எனவே, உங்கள் உடலமைப்பை மறைத்துக் காட்டும் தளர்வான ஆடைகளை அணிவது கச்சிதமாக இருக்கும்.

ஆடைகளில் டிசைன்கள்
புடவைகள், குர்த்தி, சல்வார் போன்றவற்றில் பூக்கள், கட்டங்கள், டிஜிட்டல் பிரின்ட் உட்பட பல்வேறு வண்ணமயமான டிசைன்கள் இருப்பது போன்று தேர்வு செய்ய வேண்டும். டிசைன், பிரிண்ட் இல்லாத பிளைன் கருப்பு நிற ஆடைகள் ஒல்லியாக காட்டும். 

கோடுகள், கட்டங்கள்
ஒல்லியானவர்கள் நீளவாக்கில் கோடுகள் கொண்ட ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். இது உங்களை மேலும் ஒல்லியாகக் காட்டும். அதற்கு பதிலாக, குறுக்கு கோடுகள் உள்ள டிசைனை தேர்வு செய்யலாம்.

கருப்பு டிரஸ்:
கருப்பு நிறம் பெண்களை ஒல்லியாகக் காட்டும். எனவே, ஒல்லியான பெண்கள் கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, பளிச் நிறங்களில் ஆடை அணியலாம். நாம் அணியும் ஆடைகள் ஒரு பக்கம் நம்மை அழகாக காட்டினாலும், தன்னம்பிக்கையோடு இருந்தாலே நமது தோற்றம் அழகை வெளிப்படுத்தும். 

click me!