சிங்கம் இல்லாத காட்டுக்குள் புகுந்து செம காட்டு காட்டிய வார்னர் - பேர்ஸ்டோ!!

By karthikeyan VFirst Published Apr 18, 2019, 2:08 PM IST
Highlights

ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியை 17வது ஓவரிலேயே வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி. 
 

ஐபிஎல்லில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியை 17வது ஓவரிலேயே வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. முதுகுவலி காரணமாக சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த போட்டியில் ஆடாததால் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வாட்சனும் டுபிளெசிஸும் அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரின் அதிரடியான பேட்டிங்கால் முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி. 10வது ஓவரில் வாட்சன் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டுபிளெசிஸ், ரெய்னா, கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சாம் பில்லிங்ஸும் டக் அவுட்டாகி வெளியேறினார். 

இதையடுத்து ராயுடுவும் ஜடேஜாவும் சேர்ந்து தட்டுத்தடுமாறி ஆடினர். இருவருமே ரன் குவிக்க முடியாமல் திணறினர். இருவரையும் வைத்து சன்ரைசர்ஸ் பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த, 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி வெறும் 132 ரன்களை மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 80 ரன்களை குவித்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் வெறும் 52 ரன்களை மட்டுமே எடுத்தது. 

133 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. தொடக்கத்தில் சில பந்துகளை நிதானமாக ஆடிய வார்னர், பின்னர் அதிரடியை கையில் எடுத்தார். போடும் பந்துகளை எல்லாம் அடித்து ஆடி 24 பந்துகளில் அரைசதம் அடித்தார் வார்னர். அரைசதம் அடித்ததுமே அவர் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் வில்லியம்சன், விஜய் சங்கர் ஆகியோர் ஆட்டமிழந்தாலும் பேர்ஸ்டோ ரன்ரேட் குறைந்துவிடாமல் அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவும் அரைசதம் கடந்தார். 

முதல் 6 ஓவர்களிலேயே சிஎஸ்கேவிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டனர் வார்னரும் பேர்ஸ்டோவும். வார்னர் - பேர்ஸ்டோவின் அதிரடியால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ். 

தோனி இல்லாத சிஎஸ்கேவின் நிலை படுமோசமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் தோனியின் இல்லாதது சிஎஸ்கே அணியின் மோசமான ஆட்டத்தின் மூலம் வெளிப்பட்டது. தோனி இருந்திருந்தால், சிஎஸ்கே அணியின் பேட்டிங்கின் போது மிடில் ஓவர்களில் தொடர் விக்கெட் சரிவை தடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவியிருப்பார். அதேபோலவே சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது, பவுலர்களை சரியாக பயன்படுத்த முடியாமல் ரெய்னா திணறினார். எந்த நேரத்தில் யாரை பயன்படுத்துவது என தெரியாமல் படுமோசமாக கேப்டன்சியில் சொதப்பினார் ரெய்னா. 

தோனி இல்லாத சிஎஸ்கே அணியை அடித்து துவம்சம் செய்து எளிதாக வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ். சிஎஸ்கே அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. 
 

click me!