ஆண்ட்ரே ரசலுக்கு பந்து போடுறத நெனச்சு பவுலர் பதறுனா பரவாயில்ல.. ஒரு டீமோட ஹெட் கோச்சே பயந்து போயி கிடக்குறாரு

By karthikeyan VFirst Published Apr 21, 2019, 3:38 PM IST
Highlights

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய அணி கேகேஆர் தான். அதற்கு காரணம், அந்த அணியின் மிரட்டல் ஃபினிஷர், அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் தான். 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த மூன்று அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய அணி கேகேஆர் தான். அதற்கு காரணம், அந்த அணியின் மிரட்டல் ஃபினிஷர், அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் தான். இந்த சீசனில் இதுவரை 39 சிக்ஸர்கள் அடித்து, அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக திகழ்கிறார். 5 அல்லது 6வது வரிசையில் இறங்கியும் கூட 377 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அந்த அணி பெற்ற வெற்றிகளில் பெரும்பாலான வெற்றிக்கு காரணம் ஆண்ட்ரே ரசல்தான். 

டெத் ஓவர்களில் எதிரணிகளின் பந்துவீச்சை தெறிக்கவிட்டு, சாத்தியமில்லாத விஷயங்களை கூட சாத்தியப்படுத்திவிடுகிறார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறிவருகிறார். கேகேஆர் அணியில் இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக ரசல்தான் உள்ளார். 

ரசல் ஒருவர் தான் கேகேஆர் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொள்ளும் நிலையில், ஆண்ட்ரே ரசலுக்கு பந்துவீசுவது குறித்து பேசியுள்ள சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, பெரும்பாலான வெற்றிகளை கேகேஆர் அணிக்கு ரசல்தான் பெற்று கொடுத்திருக்கிறார். அதிரடியால் எதிரணிகளை துவம்சம் செய்யக்கூடியவர் ரசல். அவருக்கு பந்துவீசும்போது பதற்றமாகத்தான் இருக்கும். எனினும் நெருக்கடியான நிலையில், அவருக்கு எதிராக திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று மூடி தெரிவித்துள்ளார். 

புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான் என சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரே ரசலை கண்டு பயந்து போயிருக்கிறார். 
 

click me!