மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்!!

By karthikeyan VFirst Published Apr 24, 2019, 12:33 PM IST
Highlights

3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. எனினும் இந்த அணிகள் எஞ்சிய போட்டிகளில் நன்றாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இல்லையெனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். 

இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். ஃபினிஷிங் பணியை செய்வதற்கு பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா இருப்பது அந்த அணிக்கு பலம். அதேநேரத்தில் அந்த அணியின் டாப் ஆர்டர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். 

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான அல்ஸாரி ஜோசப், அறிமுக போட்டியிலேயே வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை அபார வெற்றி பெற செய்ததோடு, ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பவுலிங்கையும் பதிவு செய்தார். 

அதன்பின்னர் இரண்டு போட்டிகளில் அவர் ஆடிய நிலையில், காயம் காரணமாக தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார். இந்நிலையில், தென்னாப்பிரிக்க பவுலர் ஹெண்டிரிக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைகிறார். நியூசிலாந்து பவுலர் ஆடம் மில்னே காயத்தால் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அல்ஸாரி ஜோசப் மும்பை அணியில் இணைந்தார். அவரும் காயத்தால் விலகிய நிலையில், ஹெண்டிரிக்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஹெண்டிரிக்ஸ் உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெறாததால், அவர் சீசன் முழுவதும் ஆடுவார். 

click me!