வேற எந்த டீமா இருந்தாலும் இந்நேரம் என்னை தூக்கி எறிஞ்சுருப்பாங்க!! வாட்சம் உருக்கம்

By karthikeyan VFirst Published Apr 24, 2019, 10:56 AM IST
Highlights

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்திருந்தாலும், அந்த அணியின் டாப் ஆர்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பிவந்தனர். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் டாப் ஆர்டர்கள் சரியாக ஆட வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் தோனி காட்டமாக தெரிவித்திருந்தார். 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

16 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பிளே ஆஃப் சுற்றில் எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்திருந்தாலும், அந்த அணியின் டாப் ஆர்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பிவந்தனர். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் டாப் ஆர்டர்கள் சரியாக ஆட வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் தோனி காட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் திணறிவந்த வாட்சன், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி, 96 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை தேடிக்கொடுத்தார். சதத்தை தவறவிட்டு கடைசி நேரத்தில் அவர் ஆட்டமிழந்தாலும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டவர் வாட்சன் தான். வாட்சன் தொடர்ச்சியாக சரியாக ஆடாதபோதிலும், அவர் அணியிலிருந்து நீக்கப்படவில்லை. அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், முக்கியமான நேரத்தில் வாட்சன் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஆட்டநாயகன் விருதை வென்ற வாட்சன் பேசியபோது, என் மீது ஃபிளெமிங்கும் தோனியும் வைத்த அதீத நம்பிக்கைக்கு வெறும் நன்றி என்று சொன்னால் போதாது. இதுவரை நான் ஆடிய மற்ற அணிகளாக இருந்திருந்தால் நான் சரியாக ஆடாததால் என்னை அணியிலிருந்து நீக்கியிருப்பார்கள். ஆனால் ஃபிளெமிங்கும் தோனியும் என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்பளித்தார்கள் என்று உருக்கமாக தெரிவித்தார். 
 

click me!