ஐபிஎல்லில் இருந்து விலகிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி வெளிநாட்டு வீரர்..!

By karthikeyan VFirst Published Sep 3, 2020, 8:24 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து ஆர்சிபி அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் விலகியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்று பயிற்சியை தொடங்கியுள்ளன. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி உள்ளது.

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய உலகின் தலைசிறந்த 2 வீரர்களை ஒருங்கே பெற்றிருந்தும், ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லாதது ஆச்சரியம் தான். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அந்த அணியின் அணி காம்பினேஷன் சரியில்லாததுதான். கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருவரை மட்டுமே அதிகமாக சார்ந்திருக்கிறது அந்த அணி. அதுமட்டுல்லாமல் கோர் டீம் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆகிய இரண்டும் அந்த அணியில் எப்போதுமே வலுவானதாக இருந்ததில்லை.

எனவே இந்த முறை அணியை வலுப்படுத்தும் விதமாக, குறிப்பாக ஃபாஸ்ட் பவுலிங்கை வலுப்படுத்தும் விதமாக, தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோரை ஏலத்தில் எடுத்திருந்தது ஆர்சிபி அணி.

கேன் ரிச்சர்ட்ஸனை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு குழந்தை பிறக்கவிருப்பதால், ஐபிஎல்லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் கேன் ரிச்சர்ட்ஸன். கேன் ரிச்சர்ட்ஸன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

ஐபிஎல் மாதிரியான மிகப்பெரிய தொடரிலிருந்து விலகுவது, மன வருத்தத்தை அளிப்பதாக கேன் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால், தொடரின் இடையே அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியாது என்பதால் ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாகவே விலகிவிட்டார்.
 

click me!