நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. பஞ்சாப் அணியை பஞ்சராக்க துடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!! உத்தேச அணி

By karthikeyan VFirst Published Mar 25, 2019, 5:46 PM IST
Highlights

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு அப்படியே நேர்மாறாக ஆடியது ராஜஸ்தான் அணி. சீசனின் தொடக்கத்தில் சரியாக ஆடாமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்லரை தொடக்க வீரராக புரமோட் செய்த பிறகு தொடர் வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
 

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்துள்ளன. அவற்றில், ஆர்சிபியை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், சன்ரைசர்ஸை வீழ்த்தி கொல்கத்தா அணியும், மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸும் வெற்றி பெற்றுள்ளன. 

நான்காவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே இன்று நடக்கிறது. ராஜஸ்தான் கேப்டன் ரஹானே மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் ஆகிய இருவருமே உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்குகின்றன.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி, கடந்த சீசனில் அஷ்வின் தலைமையில் அபாரமாக ஆடியது. முதல் சில போட்டிகளில் சிறப்பாக ஆடிய அந்த அணி, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் சொதப்பியதால் தொடர் தோல்விகளை தழுவி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு அப்படியே நேர்மாறாக ஆடியது ராஜஸ்தான் அணி. சீசனின் தொடக்கத்தில் சரியாக ஆடாமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்லரை தொடக்க வீரராக புரமோட் செய்த பிறகு தொடர் வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் திரும்பியிருப்பது பெரிய பலம். அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் வெளிநாட்டு வீரர்களாக களமிறங்குவர். சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய இந்திய வீரர்கள் அணியில் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெய்தேவ் உனாத்கத் மற்றும் மற்றும் குல்கர்னி ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பர். இவர்களுடன் பென் ஸ்டோக்ஸும் கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக இருப்பார். நியூசிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதி, கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய மூவரும் ஸ்பின் பவுலர்களாக இருப்பார். 

பஞ்சாப் அணியில் கெய்ல், ராகுல், பூரான் என அதிரடி பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு சற்றும் சளைத்த அணி அல்ல ராஜஸ்தான் ராயல்ஸ். 

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ்:

ரஹானே(கேப்டன்), பட்லர்(விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், மனன் வோரா, கிருஷ்ணப்பா கௌதம், பென் ஸ்டோக்ஸ், ஷ்ரெயாஸ் கோபால், இஷ் சோதி, உனாத்கத், குல்கர்னி.
 

click me!