ஐபிஎல் 2019: ஆரஞ்சு தொப்பி அவருக்குத்தான்.. அதிக விக்கெட்டை அந்த பையன் தான் எடுப்பாரு!! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆருடம்

By karthikeyan VFirst Published Mar 23, 2019, 3:34 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன் இந்த ஐபிஎல் சீசன் நடப்பதால், மற்ற சீசன்களை விட முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, கூடுதல் விறுவிறுப்புடனும் இருக்கும். ஏனெனில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இழுபறியில் உள்ள சில இடங்களுக்கு ஐபிஎல்லில் ஆடுவதை பொறுத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் அந்த வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள்.
 

2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் இன்று தொடங்குகிறது. 

சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதேநேரத்தில், சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இணைந்து 8 முறை கோப்பையை வென்றுள்ளன. சில அணிகள் தொடர்ந்து கோப்பையை வென்றுவரும் நிலையில், சில அணிகள் தொடர்ந்து சொதப்பிவருகின்றன. 

இதுவரை கோப்பையை வென்றிராத ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளுமே முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலக கோப்பைக்கு முன் இந்த ஐபிஎல் சீசன் நடப்பதால், மற்ற சீசன்களை விட முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு, கூடுதல் விறுவிறுப்புடனும் இருக்கும். ஏனெனில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இழுபறியில் உள்ள சில இடங்களுக்கு ஐபிஎல்லில் ஆடுவதை பொறுத்து வீரர்கள் தேர்வு செய்யப்படலாம். 

எனவே 4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்களுக்கு போட்டியிடும் வீரர்கள் பொளந்து கட்டுவார்கள். குறிப்பாக மாற்று விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடிப்பதில் ரிஷப் பண்ட்டுக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. 

ராயுடு, விஜய் சங்கர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, உனாத்கத் ஆகிய வீரர்கள் இந்த சீசனில் ஆக்ரோஷமாக ஆடுவர். 

இந்நிலையில், இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை ரிஷப் பண்ட்டும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை குல்தீப் யாதவும் பெறுவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், ரோஹித் சர்மா, விராட் கோலி, வில்லியம்சன், டேவிட் வார்னர் ஆகியோர் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அதிக ரன்களை அடிப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தமட்டில் ரிஷப் பண்ட் தான் ஆரஞ்சு தொப்பியை பெறுவார். அதேபோல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலராக நீங்கள் ரஷீத் கானை பார்க்கலாம். என்னை பொறுத்தமட்டில் குல்தீப் யாதவ் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நினைக்கிறேன் என மைக்கேல் வாகன் தனது கருத்தை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

click me!