ராயுடுவை தூக்கி அடித்த தோனி.. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய சிஎஸ்கே

Published : Apr 06, 2019, 04:11 PM IST
ராயுடுவை தூக்கி அடித்த தோனி.. அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய சிஎஸ்கே

சுருக்கம்

எல்லா சீசன்களை போலவே இந்த சீசனையும் சிஎஸ்கே அணி வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளது. ஏற்கனவே லுங்கி நிகிடி காயத்தாலும் டேவிட் வில்லி சொந்த காரணங்களுக்காகவும் இந்த சீசனை விட்டு விலகிய நிலையில், பிராவோவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் இரண்டு வாரங்களுக்கு ஆடமுடியாத நிலையில் இருக்கிறார்.   

ஐபிஎல் 12வது சீசனில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடிவருகிறது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மட்டுமே தோல்வியை தழுவியது. மற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் நான்காமிடத்தில் உள்ளது. 

எல்லா சீசன்களை போலவே இந்த சீசனையும் சிஎஸ்கே அணி வெற்றிகரமாகவே தொடங்கியுள்ளது. ஏற்கனவே லுங்கி நிகிடி காயத்தாலும் டேவிட் வில்லி சொந்த காரணங்களுக்காகவும் இந்த சீசனை விட்டு விலகிய நிலையில், பிராவோவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் இரண்டு வாரங்களுக்கு ஆடமுடியாத நிலையில் இருக்கிறார். 

இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததுமே, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அதிரடியான மாற்றங்களுடன் களமிறங்கும் என தோனி தெரிவித்திருந்தார். அதேபோலவே பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்த போட்டியில் டுபிளெசிஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ளதால், அவர் வாட்சனுடன் தொடக்க வீரராக களமிறங்கியிருக்கிறார். இந்த சீசனில் இதுவரை சரியாக ஆடாத ராயுடு 4ம் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்து வீரர் ஸ்காட் குஜ்ஜெலின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக உள்ளனர். ஷ்ர்துல் தாகூர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஸ்காட் குஜ்ஜெலின்.

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்