இது மாதிரியான சம்பவம்லாம் எப்போதாவதுதான் நடக்கும்!! பரிதாபமா நின்ற பவுலர்.. பதறியடித்த கேப்டன்.. வீடியோ

By karthikeyan VFirst Published Apr 8, 2019, 10:32 AM IST
Highlights

இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் மிக விரைவில் விரட்டப்பட்ட இலக்கு இதுதான். மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் அதிகமான நெட் ரன்ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கேகேஆர் அணியும் மோதின. 

இந்த சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்துவரும் கேகேஆர் அணி, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. ராஜஸ்தான் அணியை 139 ரன்களுக்கு சுருட்டி, 140 ரன்கள் என்ற இலக்கை 14வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்த சீசனில் இதுவரை நடந்த போட்டிகளில் மிக விரைவில் விரட்டப்பட்ட இலக்கு இதுதான். மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததால் அதிகமான நெட் ரன்ரேட்டுடன் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் கேகேஆரை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி, இந்த போட்டியில் தோற்றுவிட்டதால் 2 புள்ளிகளுடன் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. 

இந்த போட்டியில் 140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் பவர்பிளேயிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டனர். முதல் இரண்டு ஓவர்களிலேயே லின்னும் நரைனும் இணைந்து 32 ரன்களை குவித்துவிட்டனர். ஆட்டம் ராஜஸ்தான் அணியிடமிருந்து கைமீறி போன நிலையில், அந்த அணிக்கு விக்கெட் தேவைப்பட்டது. அப்படியான சூழலில் குல்கர்னி வீசிய 4வது ஓவரின் இரண்டாவது பந்து ஸ்டம்பில் பட்டது. ஆனால் ஸ்டிக் கீழே விழாததால் கிறிஸ் லின் தப்பினார். அந்த பந்து ஸ்டம்பில் அடித்து பவுண்டரிக்கு ஓடியது. ஸ்டிக் விழாததால் விக்கெட்டும் கிடைக்கவில்லை, அந்த பந்து பவுண்டரியும் ஆனது. அதனால் பவுலர் குல்கர்னியும் கேப்டன் ரஹானேவும் கடும் அதிருப்தியடைந்தனர். இதுமாதிரியான சம்பவங்கள் எல்லாம் அரிதாக நடக்கக்கூடியவை. அந்த வீடியோ இதோ.. 

click me!