#CSKvsKKR சத வாய்ப்பை தவறவிட்ட ராணா.. ஒரே ஓவரில் தலைகீழாக திரும்பிய ஆட்டம்.. சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Oct 29, 2020, 9:23 PM IST
Highlights

நிதிஷ் ராணாவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 172 ரன்களை குவித்த கேகேஆர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரராக இறங்கிய நிதிஷ் ராணா, அருமையாக ஆடி அரைசதம் அடித்தார். அவரைத்தவிர வேறு யாரும் பெரிதாக அடிக்கவில்லை. கில்லும் ராணாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 53 ரன்கள் அடித்தனர். கில் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் பேட்டிங் ஆட வந்த சுனில் நரைன் 7 ரன்களுக்கும் அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த ரிங்கு சிங் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ராணா, அரைசதம் அடித்தார்.

பதினைந்து ஓவர் முடிவில் கேகேஆர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அந்த கட்டத்தில் 150-160 ரன்களுக்கு கேகேஆர் அணியை சுருட்டியிருக்க முடியும். ஆனால் கரன் ஷர்மா வீசிய பதினாறாவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 19 ரன்களை குவித்தார் ராணா. அந்த ஓவர் தான் ஆட்டத்தை தலைகீழாக திருப்பியதுடன், கேகேஆர் அணி 172 ரன்களை எட்ட உதவியது. அதற்கடுத்த ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய ராணா, 18வது ஓவரில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 61 பந்தில் 87 ரன்கள் அடித்து ராணா அவுட்டானார். இன்னும் 2 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், ராணாவின் சதத்திற்கு 13 ரன்களே தேவைப்பட்ட நிலையில் சதத்தை தவறவிட்டார் ராணா. 

டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் தனது பணியை செவ்வனே செய்து 10 பந்தில் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!