உலக கோப்பையை ஜெயிக்கணும்னா அவர கண்டிப்பா டீம்ல எடுங்க!! நட்சத்திர வீரரா ஜொலிக்கப்போறது அவருதான்

By karthikeyan VFirst Published Mar 24, 2019, 1:20 PM IST
Highlights

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் நடந்துவருகிறது. 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு தேவையான சில இடங்களை உறுதி செய்ய ஐபிஎல் ஒரு வாய்ப்பாக உள்ளது. ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. 

முதல் போட்டியிலேயே ஆர்சிபியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு ஸ்பின்னிற்கு பயங்கர சாதகமாக அமைந்தது. ஆடுகளத்தில் வேகமே இல்லாததோடு பந்து நன்றாக ஸ்பின்னும் ஆனது. அதனால் ஆர்சிபி அணி வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. 71 ரன்கள் என்ற இலக்கையே சிஎஸ்கே அணி 18வது ஓவரில்தான் எட்டியது. 

இந்த போட்டியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய சிஎஸ்கே ஸ்பின்னர்கள் அபாரமாக பந்துவீசினர். இவர்கள் மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், மொயின் அலி ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

போட்டிக்கு பின்னர் பேசிய ஹர்பஜன் சிங், ஜடேஜா மாதிரியான வீரர் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பு அளிக்கக்கூடியவர். ஜடேஜா உலக கோப்பையை வென்று கொடுக்கும் முக்கியமான நட்சத்திர வீரராக ஜொலிப்பார். அவரது ஃபீல்டிங் அபாரமானது என்று ஜடேஜாவை புகழ்ந்து பேசினார். 

நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரின் கேட்ச்களையும் பிடித்தார். உலக கோப்பை அணியில் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உள்ளார். மேலும் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் இடம்பிடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஜடேஜா உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவது உறுதியில்லை என்ற நிலையில், ஜடேஜா கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!