வித்தைக்கார பவுலர்.. எந்தமாதிரி பந்து வீசப்போறார்னு யாருக்கும் தெரியாது! கம்பீர் ஆவலா எதிர்நோக்கும் பவுலர்

By karthikeyan VFirst Published Sep 5, 2020, 7:44 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுனில் நரைனின் பவுலிங்கை காண ஆவலாக இருப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு ஐபிஎல் சீசனும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது. அந்த ஐபிஎல்லில் கேகேஆர் அணி கோப்பையை வென்றது. 

கவுதம் கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி 2012ம் ஆண்டுக்கு பிறகு 2014ம் ஆண்டில் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. கேகேஆர் அணியின் வெற்றிக்கு ஸ்பின் பவுலர் சுனில் நரைன் முக்கியமான காரணம். அவரது பவுலிங் கேகேஆரின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தது. 

2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முறை ஐபிஎல் நடக்கவுள்ளது. இந்த சீசனிலும் சுனில் நரைன் அசத்துவார் என கம்பீர் நம்புகிறார். 

சுனில் நரைன் குறித்து பேசியுள்ள கம்பீர், ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் சுனில் நரைனுக்கு நல்ல க்ரிப் மட்டும் கிடைத்துவிட்டால், மிரட்டிவிடுவார். சுனில் நரைன் வேகமாக வீசக்கூடியவர். ரஷீத் கானும் ஸ்பின் பவுலிங்கை வேகமாக வீசுவதால்தான் ஜொலிக்கிறார். சுனில் நரைன் வேகமாக வீசினால் ஆதிக்கம் செலுத்துவார். சுனில் நரைன் பந்தை கையில் மறைத்திருப்பார். அதனால் பேட்ஸ்மேன்களுக்கு அவர் எந்தமாதிரியான ஸ்பின்னை வீசப்போகிறார் என்பதே தெரியாது. சுனில் நரைன் பந்தை மறைத்துவைத்து வீசினால், பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் இதுவரை 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுனில் நரைன், ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார் சுனில் நரைன். 2013 ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். கேகேஆர் அணியின் நட்சத்திர வீரராக நரைன் ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!