டெல்லி கேபிடள்ஸ் சர்ப்ரைஸ் முடிவு நல்ல பலனை தந்தது..! சன்ரைசர்ஸுக்கு எதிராக அதிரடி தொடக்கம்

By karthikeyan VFirst Published Nov 8, 2020, 8:26 PM IST
Highlights

சன்ரைசர்ஸூக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா ஆடாததால், தவானுடன் ரஹானே தான் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவானுடன் யாருமே எதிர்பார்த்திராத விதமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார்.

டெல்லி கேபிடள்ஸின் இந்த சோதனை முயற்சி நல்ல பலனை தந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பவுண்டரிகளை விளாசி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடினார். சந்தீப் ஷர்மா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த ஸ்டோய்னிஸ், ஹோல்டர் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. அதன்பின்னர் தவான் அடித்து ஆட தொடங்கினார்.

ஐந்தாவது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தவான், அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் அடித்தது டெல்லி அணி.  முதல் விக்கெட்டுக்கு ஸ்டோய்னிஸும் தவானும் இணைந்து 8.2 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி தனது பணியை செவ்வனே செய்த ஸ்டோய்னிஸ் 27 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடித்தார். 

தவானும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து ஆட, 10வது ஓவரிலேயே 100 ரன்களை குவித்துவிட்டது டெல்லி அணி.
 

click me!