CSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி

Published : Oct 19, 2020, 07:16 PM IST
CSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 13வது சீசனின் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. 

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தான் இரு அணிகளுமே களமிறங்குவதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிராவோ காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். கரன் ஷர்மா நீக்கப்பட்டு பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார். யாரை வேண்டுமானாலும் நீக்குவேன்; ஆனால் கேதர் ஜாதவை மட்டும் நீக்கமாட்டேன் எனும் ரீதியாக, அவரை அணியிலேயே வைத்துள்ளார் தோனி.

சிஎஸ்கே அணி:

சாம் கரன், டுப்ளெசிஸ், ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, கேதர் ஜாதவ், ஹேசில்வுட், தீபக் சஹார், ஷர்துல் தாகூர், பியூஷ் சாவ்லா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஜெய்தேவ் உனாத்கத் நீக்கப்பட்டு அங்கித் ராஜ்பூத் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்பூத்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்