கேகேஆர் அணியின் ஓய்வறையில் நல்ல சூழல் நிலவவில்லை; ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் 14 புள்ளிகளை பெற்று, குறைவான நெட் ரன்ரேட்டால் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது கேகேஆர் அணி. சீசனின் இடையே கேப்டன் மாற்றப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, இயன் மோர்கன் கேப்டனாக்கப்பட்டார்.
கேகேஆர் அணி நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், கேப்டன் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. அதுவும் சீசனின் இடையே மாற்றப்பட்டது தான், அந்த அணியின் ஓய்வறை சூழல் சரியாக இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக அமைந்தது.
undefined
இந்நிலையில், கேகேஆர் அணி குறித்து பேசிய அஜித் அகார்கர், கேகேஆர் அணி நன்றாகத்தான் ஆடியது. அந்த அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்த நிலையில், இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். நல்ல நிலையில் இருந்தபோது, தேவையில்லாமல் சீசனின் இடையே கேப்டனை மாற்றியது, அந்த அணியின் கேம்ப்பில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்த்தியது. டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது சாத்தியமற்றது. ஆனால் அதேவேளையில் அந்த அணியில் இருக்கும் சிறுசிறு பிரச்னைகளை கலைந்து சரியான கேப்டனை நியமித்து, தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் இருந்தாலே போதும் என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.