காஷ்மீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த இர்பான்… அங்கிருந்து வெளியிட்ட வீடியோ வைரல்!!

Published : Mar 22, 2023, 12:00 AM ISTUpdated : Mar 22, 2023, 12:09 AM IST
காஷ்மீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த இர்பான்… அங்கிருந்து வெளியிட்ட வீடியோ வைரல்!!

சுருக்கம்

காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் பிரபல யூடிபர் இர்பான் காஷ்மீரில் இருந்து நிலநடுக்கம் குறித்து வீடியோவை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் பிரபல யூடிபர் இர்பான் காஷ்மீரில் இருந்து நிலநடுக்கம் குறித்து வீடியோவை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பல வட இந்திய மாநிலங்களில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. மேலும் இது ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவு!!

இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபைசபாத்தில் இருந்து தென்கிழக்கே 133 கிமீ தொலைவில் தாக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரபல யூடிபர் இர்பான் காஷ்மீரில் இருந்து நிலநடுக்கம் குறித்து வீடியோ வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இதை செய்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும்... வியூகத்தை கூறிய பிரசாந்த் கிஷோர்!!

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் காஷ்மீரில் ஒரு ஹோட்டலில் தூக்கிக்கொண்டிருந்ததாகவும் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து அசத்தில் அங்கிருந்த அனைவரும் ஹோட்டலின் நுழைவு பகுதிக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் நிலநடுக்கத்தை உணருவது இதுவே முதல் முறை என்று கூறிய அவர், காஷ்மீரின் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!