இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவை பெரும்பாலும் வடமாநிலங்களாக உள்ளன. குறிப்பாக இமயமலை அருகே உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுற்றியுள்ள 1000 கி.மீ. தொலைவுக்கு இதன் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்தியாவிலும் தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதிர்வை உணர்ந்த மக்கள் பீதியடைந்து கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் கட்ட தகவலில் இந்த நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நம்பப்படுகிறது.
டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவு!!
in and across parts of Kashmir valley… (perhaps across Northern region of )
Hope there’s nothing worrisome… there is quite a lot of panic! pic.twitter.com/Y40TUwKFeK
இந்தியாவைப் பொறுத்தவரை வட மாநிலங்களில் அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன. பெரிய அளவில் ஏற்படும் நிலநடுக்கங்களும் அதிக அளவில் வட மாநிலங்களைத்தான் பாதிக்கின்றன. அண்மையில் உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின்போது நிலநடுக்க அபாயம் பற்றியும் கவலை ஏற்பட்டது.
அப்போது, நிலநடுக்கவியல் நிபுணருமான டாக்டர் பூர்ணசந்திர ராவ் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதைப் பற்றி விளக்கினார். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) தலைமை விஞ்ஞானியான அவர், “இமாச்சல பிரதேசம், நேபாளத்தின் மேற்குப் பகுதி, உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” எனக் கூறினார். நிலத்தட்டுகளில் அதிகரித்துவரும் அழுத்தம் காரணமாக இந்தியாவில் பெரும் பூகம்பம் உண்டாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பூமியின் மேற்பரப்பு தொடர் இயக்கத்தில் இருக்கிறது. அது பல்வேறு தட்டுகளைக் கொண்டது. பூமியின் நிலத்தட்டுகள் ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 5 செமீ வரை நகர்கிறது. இதனால் இமயமலைப் பகுதியில் அழுத்தம் குவிந்து நிலநடுக்கம் உண்டாகும் சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன” என பூர்ணசந்திர ராவ் சொல்கிறார்.
நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் நாடு மு ழுவதும் நிலநடுக்கங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இமயமலையை ஒட்டி ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், டெல்லி; வட கிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவையும் பீகார், குஜராத், அந்தமான் & நிக்கோபார் முதலி ய பகுதிகளும் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக உள்ளன என்று கூறுகிறது.
ll வடமாநிலங்களில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது l l l l l l pic.twitter.com/e9WUJK0QTk
— Asianetnews Tamil (@AsianetNewsTM)டெல்லி இமயமலைக்கு அருகில் இருப்பதால், நிலத்தட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் டெல்லியில் உணரப்படுகின்றன என நிலநடுக்கவியல் நிபுணர்கள் கூறுகின்றன ர். இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது டெல்லியையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இமயமலை அடிவாரப் பகுதி உலக அளவிலும் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1934 ஆம் ஆண்டில் பீகார்-நேபாளத்தில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் 10,000 மக்களைக் பலி வாங்கியது. 1991 ஆம் ஆண்டு உத்தரகாசியில் 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 800 பேர் உயி ரிழந்தனர். 2005ஆம் ஆண்டில், காஷ்மீரில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 80,000 பேருக்கு மேல் பலியானார்கள்.
மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்! 500 பெண்களுக்கு சேலை, அன்னதானம்!