நீங்கள் மோடிதானே.. நீங்கள் மக்களவையில் வேலை செய்கிறீர்கள்.. பிரதமரை திகைக்க வைத்த 5 வயது சிறுமி.

By Ezhilarasan Babu  |  First Published Jul 28, 2022, 1:06 PM IST

நீங்கள் மோடி என்றும், நீங்கள் ராஜ்யசபாவில் வேலை செய்கிறீர்கள் என்றும் பிரதமரிடம் 5 வயது சிறுமி கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாராட்டியுள்ளார்.


நீங்கள் மோடி என்றும், நீங்கள் ராஜ்யசபாவில் வேலை செய்கிறீர்கள் என்றும் பிரதமரிடம் 5 வயது சிறுமி கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாராட்டியுள்ளார்.

பல சர்வதேச நாடுகளில் பிரச்சினைகளை கூட சிம்பிளாக டீல் செய்யும் பிரதமர் மோடி, சிலநேரங்களில் சிறவர் சிறுமியர்களை சந்தித்து செல்லமாக விளையாடுவது கணமுடிகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஃபிரோஜியா தனது குடும்பத்தாருடன் பிரதமரை சந்திக்க சென்றார். 

Tap to resize

Latest Videos

அப்போது அவரது 5 வயது மகள் அஹானாவுடன்  பிரதமர் மோடி நடத்திய உரையாடல்  மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. தன்னை சந்திக்க வந்த சிறுமியிடம் பிரதமர் மோடி, நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? எனக் கேட்டதற்கு, அந்த ஐந்து வயது சிறுமி 'ஆம் நீங்கள் மோடி என்று எனக்குத் தெரியும்'  உங்களை தினமும் நான் டிவியில் பார்க்கிறேன் எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்: 20 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 20,557 பேருக்கு பாதிப்பு.. 44 பேர் பலி

அப்படியா... என்ற பிரதமர், இரண்டாவதாக நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார், அதற்கு அந்த சிறுமியை ' நீங்கள் மக்களவையில்  பணிபுரிகிறார்கள்' என தயங்காமல் பதில் அளித்தார். இதைக் கேட்டு அந்த அறையிலிருந்த அனைவரும் கைத்தட்டி சிரித்தனர், பிரதமர் மோடியும் சிறுமியின் பதிலை கேட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்.

இதையும் படியுங்கள்: வெளியானது பணக்கார இந்திய பெண்களின் பட்டியல்... முதலிடத்தில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா... யார் இவர்?

பின்னர் அங்கிருந்து செல்லும்போது பிரதமர் அந்த சிறுமிக்கு சாக்லேட் வழங்கி பாராட்டினார். சமீபகாலமாக பிரதமர் மோடி சிறுவர்களுடன் வேடிக்கையாக உரையாடுவதை அடிக்கடி காணமுடிகிறது, சமீபத்தில் சிறுமி ஆஹானாவின் தந்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யின் சவாலை ஏற்று உடல் எடையை குறைத்தது பேசுபொருளாக இருந்துவந்தது. தற்போது சிறுமி அஹானா பிரதமரிடம்  நடத்திய உரையாடல் பலரையும் ஈர்த்துள்ளது.

 

मैं सौभाग्यशाली हूं कि ऐसे कर्मठ,ईमानदार,नि:स्वार्थ,त्यागी व देश के लिए अपना संपूर्ण जीवन समर्पित कर देने वाले प्रधानमंत्री आदरणीय श्रीं नरेंद्र मोदी जी के सानिध्य में मुझे भी जनता की सेवा का अवसर मिला है। pic.twitter.com/K71WfAGgsm

— Anil Firojiya (@bjpanilfirojiya)

இந்நிலையில் எம்பி  ஃபிரோஜியா தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்தித்தது தொடர்பாக புகைப்படக்களை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்று மறக்க முடியாத நாள், உலகின் மிகவும்  பிரபலமான  தலைவரும், நாட்டின் வெற்றிகரமான பிரதமருமான மரியாதைக்குரியவருமான நரேந்திர மோடி அவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

இன்று அவரின் ஆசிர்வாதத்தை பெற்றேன், தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்த கடுமையான உழைப்பாளி, தன்னலமற்ற மற்றும் தியாக மிக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பொது மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு பெற்றுள்ளேன். இன்று எனது மகள்கள் அஹானா மற்றும் மூத்த மகள் பிரியன்ஷி இருவரும் மரியாதைக்குரிய பிரதமரை நேரடியாக சந்தித்து அவரின் அன்பை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார். 
 

click me!