பார்த்தா சாட்டர்ஜியை நீக்க முதலில் டுவீட்; திடீரென பல்டி அடித்த மூத்த தலைவர்; என்ன நடந்தது?

By Dhanalakshmi GFirst Published Jul 28, 2022, 12:55 PM IST
Highlights

முதலில் பார்த்தா சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று  டுவிட்டரில் பதிவிட்ட திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணல் கோஷ் திடீரென அந்தப் பதிவை நீக்கியுள்ளார். மாலையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் எனது கருத்தை தெரிவிப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், செய்தி தொடர்பாளருமான குணால் கோஷ் கட்சி டுவிட்டர் மூலமாக வேண்டுகோள் விடுத்து இருந்தார். பின்னர் அந்த டுவிட்டை நீக்கி, இந்த விஷயத்தில் கட்சி முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத்துறை கடந்த வாரம் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது 20 கோடி ரூபாய் ரொக்கம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.  

2024இல் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. திரும்பவும் பாஜக ஆட்சிக்கு வராது.. கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி.!

நேற்றும் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அங்கும், ரூ. 28.9 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் அனைத்தும் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டின் வழியாக ஈட்டியது என்று அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை  மெஷின் உதவி கொண்டு எண்ணினர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி இருவரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்து இருக்கிறதா என்பது குறித்து சி மற்றும் டி கிரேடு ஆசிரியர்களின் நியமனம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

5g spectrum auction:கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது

முதலில் பார்த்தா சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று  டுவிட்டரில் பதிவிட்ட குணல் கோஷ் திடீரென அந்தப் பதிவை நீக்கியுள்ளார். புதிய டுவிட்டரில், ''எனது கருத்தைத்தான் முதலில் தெரிவித்து இருந்தேன். இன்று மாலை ஐந்து மணிக்கு கட்சி அபிஷேக் பானர்ஜி தலைமையில் கூடுகிறது. எனக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். நானும் கலந்து கொண்டு எனது கருத்தை வைப்பேன்'' என்று பதிவிட்டுள்ளார். 

click me!