Partha Chatterjee: ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுதல்

By Pothy RajFirst Published Jul 28, 2022, 12:43 PM IST
Highlights

மே.வங்க தொழிற்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜிக்கு நெருங்கியவரான அர்பிதா முகர்ஜிக்கு தொடர்புடைய கொல்கத்தாவில் உள்ள அடுக்கு மாடி வீட்டிலிருந்து ரூ.28 கோடி ரொக்கம், தங்க நகைகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மே.வங்க தொழிற்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜிக்கு நெருங்கியவரான அர்பிதா முகர்ஜிக்கு தொடர்புடைய கொல்கத்தாவில் உள்ள அடுக்கு மாடி வீட்டிலிருந்து ரூ.28 கோடி ரொக்கம், தங்க நகைகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேற்குவங்க மாநில மேல்நிலை கல்வி வாரியங்களில் பணி நியமனத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஊழல் நடந்தது. 

முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதில் முறைகேடான வழியில் பணம் புழங்கியதையடுத்து, அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

பர்தா சாட்டர்ஜி கைது அவரின் நெருக்கமான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமாக தெற்கு கொல்கத்தாவில் உள்ள டோலிகுனே பகுதியில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பர்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கப்பிரிவு நடத்திய விசாரணையில் அவருக்கு எங்கெல்லாம் சொத்துக்கள், வீடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்டங்கா பகுதியிலும், பெல்ஹாரியாவிலும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

பொலிவுபெறும் பிஎஸ்என்எல்: மறுசீரமைக்க ரூ.1.64 லட்சம் கோடி: 4ஜி வருகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அங்குள்ள சாட்டர்ஜிக்கு சொந்தமான வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால், அதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பூட்டை உடைத்து சென்று ஆய்வுசெய்தனர்.

இந்த ஆய்வில் கட்டுக்கட்டாக ரூ.28 கோடி ரொக்கப்பணம், நகைகள் ஆகியவற்றை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கநகைகளை  எடைபோட்டு மதிப்பிடும் பணியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

கடந்த 5நாட்களுக்கு முன் சாட்டர்ஜிக்கு சொந்தமான வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.50 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர முக்கிய ஆவணங்களையும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!

பர்தா சாட்டர்ஜி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோதிலும்கூட அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி நீக்கவில்லை. இதையடுத்து, பர்தா சாட்டர்ஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கோரி திரணமூல் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அமைச்சர்களும் முதல்வர் மம்தாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
 

click me!