narendra modi:நேருவைப்போல் அல்ல! தனது பாரம்பரியத்தை பற்றி பெருமைப்படும் பிரதமர் மோடிதான் ! ஆதித்யநாத் புகழாரம்

By Pothy Raj  |  First Published Sep 10, 2022, 9:13 AM IST

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் போல் அல்ல, பிரதமர் மோடி தனது  பாரம்பரியத்தை நினைத்து பெருமை கொள்ளபவர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் போல் அல்ல, பிரதமர் மோடி தனது  பாரம்பரியத்தை நினைத்து பெருமை கொள்ளபவர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

வாரணாசியில் மோடி@2.0 என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

Tap to resize

Latest Videos

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பொறுப்பு… பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்த தேசம் ஒரு உன்னதமான பிரதமரைப் பெற்றுள்ளது. தேசத்தின் பாரம்பரியத்தோடு இணைவதில் பெருமை கொள்வதோடு மட்டுமல்லாமல், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்று தீர்மானிக்கும் ஒரு பிரதமரை இந்த தேசம் பெற்றுள்ளது. 

தனது பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படாத ஒரு ஒரு பிரதமரை இநத் தேசம் பெற்றுள்ளது. அது நாட்டின் முதல் பிரதமர் நேருதான். ஆனால் அவரைப்போல் பிரதமர் மோடி இல்லை,  நாட்டின் பாரம்பரியத்தை நினைத்தும், தனது பாரம்பரியத்தை நினைத்தும் பெருமைப்படக்கூடியவர் நரேந்திரமோடிதான். 

நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன் படிப்பு? விளக்கம் அளிக்கும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)!!

தீவிரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது, எவ்வாறு கையாள்வது என்பதற்கு உலகிற்கே இந்தியாவை உதாரணமாக மாற்றியவர் பிரதமர் மோடிதான். காஷ்மீரில் எப்போதுமே தீவிரத்தின் ஆனிவேரை பிடுங்கி எறிவதில் எந்தவிதமான தயக்கமும் கொள்ளாதவர். இதுதான் பிரதமர் மோடியின் தலைமைப்பதவியின் திறமை.

சோம்நாத் கோவிலின் மறுசீரமைப்பு பணிக்கு குடியரசுத் தலைவரை அனுப்ப எதிர்ப்புத் தெரிவித்த பிரதமரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்று, அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமானத்தை தானே முன்னிருந்து நடத்தும் பிரதமரைப் பார்க்கிறோம்.

உலகளவில் இன்று மிகவும் புகழ்பெற்ற தலைவர்களில் நமது பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பது நாம் அனைவருக்கும் பெருமை. இந்த நூல் பிரதமர் மோடியின் 20 ஆண்டு நிர்வாகத்திறமை வெளிப்படுத்தும்விதமாக இருக்கிறது. இதை அனைத்து சமூக மக்களும் தங்களின் அனுபவங்களைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..? ராகுல் காந்தி கூறிய பதில் என்ன..?

இந்த தேசத்தை உலகளவில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றியவரும் பிரதமர் மோடிதான். இந்தியாவை 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவை இந்த நிலைக்கு உயர்த்தியது பிரதமர் மோடிதான். 


இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்
 

click me!