
மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 17 லட்சத்து 64,571 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நேரடி படிப்புக்கு இணையானதா ஆன்லைன் படிப்பு? விளக்கம் அளிக்கும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)!!
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் https:// neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி ரோகினி என்பவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ரோகினி தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும், இந்த தேர்வில் அவர் 350 மதிப்பெண்களுக்கு அருகில் எடுத்துள்ளார். இப்போது இந்த ஆண்டு அதாவது இரண்டாவது முறையாக நீட் தேர்வில் 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஈஷா-விற்கு எதிரான அவதூறு செய்தி கட்டுரையை முடக்க VICE மீடியா குழுமத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரோகினி ஓபன் பிரிவில் இருந்து வருவதால், அவர் 565க்கு மேல் மதிப்பெண் எதிர்பார்த்த நிலையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ரோகிணி மனமுடைந்தார். இதை அடுத்து இரவு வழக்கம் போல் ரோகிணி குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்க சென்றனர். இன்று வியாழன் காலை 5 மணிக்கு எழுந்து வெளியே போகவில்லை. இந்த பதற்றத்தில் இருந்து, அவர் தீவிர முடிவை எடுத்துள்ளார். அவர் எடுத்த இந்த அதீத முடிவால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, அப்பகுதி காவல்துறையினர் ரோகிணியின் திடீர் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.