இந்தியாவில் நடவடிக்கை தூதரக உறவுகள் குறித்த வியன்னா உடன்படிக்கை செய்யப்பட்ட சர்வதேச சட்டங்களின்படியே நடைபெற்றது என்று அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.
கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், கனடா மக்களுக்கு இந்தியா வர விசா வழங்கும் பணிகளை மீண்டும் தொடங்குவ வாய்ப்பு உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின உள்விவகாரங்களில் தலையிடுவதை கனடா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியாவின் தொடர்பு ஈடுபாடு இருப்பதாக கடந்த மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்ததை அடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
undefined
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. அது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரியை வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டது.
ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து 143 பேருடன் 6வது விமானம் டெல்லி வருகை
இந்நிலையிர், "கனடாவில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் காணப்பட்டால், விசா வழங்குவதை மீண்டும் தொடங்க விரும்புகிறோம்" என்று எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்தியா-கனடா உறவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கனடாவின் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை தூதரக உறவுகள் குறித்த வியன்னா உடன்படிக்கை செய்யப்பட்ட சர்வதேச சட்டங்களின்படியே நடைபெற்றது என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்திய விவகாரங்களில் கனடா தலையிட்ட காரணத்தினால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் தூதரக உறவுகள் குறித்த வியன்னா உடன்படிக்கையை மீறும் செயல் என்றும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி சென்ற வியாழக்கிழமை கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியா - கனடா இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கினால் இதுவரை இந்தியாவில் இருந்து கனடாவின் தூதரக அதிகாரிகள் 41 பேர் வெளியேறி உள்ளனர்.